இந்தியாவுக்கு 20 வது தங்கம்.! பதக்க பட்டியலில் அசத்தல்.! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இன்றுடன் முடிகிறது. இறுதி நாளான இன்று இந்திய பதக்க வேட்டையை நிகழ்த்தி வருகிறது.

பேட்மிண்டன் ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் இந்தியாவின் லக்‌ஷயா சென், மலேசியாவின் சீ யாங் வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

முதல் செட்டை 19-21 என கோட்டை விட்ட லக்‌ஷயா சென், அடுத்த இரு செட்களை 21-9, 21-16 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

இதன்மூலம், இந்தியா 20 தங்கம், 15 வெள்ளி, 22 வெண்கலம் என மொத்தம் 57 பதக்கங்களை கிடைத்துள்ளது.

முன்னதாக பெண்களுக்கான பேட்மிண்டன் ஒற்றையர் இறுதி போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து, கனடாவின் மிச்செல் லி வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பதக்க பட்டியலில் இந்திய நான்காவது இடத்தில் உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Commonwealth Games Badminton Lakshya Sen 


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->