காமன்வெல்த் போட்டி : பதக்க பட்டியலில் நம் இந்திய அணி இரு இடங்கள் முன்னேற்றம்.! - Seithipunal
Seithipunal


காமன்வெல்த் போட்டியின் பதக்க பட்டியலில் நம் இந்திய அணி இரு இடங்கள் முன்னேறி 6 வது இடத்துக்கும் முன்னேறியுள்ளது.

மொத்தம் இரு தங்கம், இரு வெள்ளி, ஒரு வெண்கலம் என 5 பதக்கங்களுடன் இந்திய அணி 6 வது இடத்தில உள்ளது. 

இந்திய பதக்க பட்டியல் விவரம் :

* பளு தூக்கும் போட்டியில் 67 கிலோ ஸ்நாட்ச் பிரிவில் இந்தியாவின் ஜெர்மி லால்ரின்னுங்கா 140 கிலோ தூக்கி புதிய கேம்ஸ் சாதனை படைத்தார்.

* பளுதூக்குதல் போட்டியின் 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு தங்கப்பதக்கம் வென்றார்.

* பளுதூக்குதல் போட்டியின் 55 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை பிந்தியாராணி தேவி, 202 கிலோ எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

* பளுதூக்குதல் ஆடவா் 55 கிலோ பிரிவில் சங்கட் சா்காா் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

* பளுதூக்குதல் 61 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரா் குருராஜா பூஜாரி மொத்தம் 269 கிலோ எடை தூக்கி வெண்கலம் வென்றாா். 

காமன்வெல்த் பதக்கப் பட்டியலில் 6வது இடத்தில் இந்தியா உள்ளது. முதலிடத்தில் 13 தங்கம் உட்பட 32 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா முதலிடத்திலும், 7 தங்கம் உட்பட 24 பதக்கங்களுடன் நியூசிலாந்து 2வது இடத்திலும், 7 தங்கம் உட்பட 13 பதக்கங்களுடன் இங்கிலாந்து 3வது இடத்திலும் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

commonwealth 2022 medal list india 5 medals


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->