ஆஸி.க்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியிலிருந்து இந்திய அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் விலகல்.!! - Seithipunal
Seithipunal


சிட்னியில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியின் போது தொடைப்பகுதியில் காயமடைந்த இந்திய பேட்ஸ்மேன் ஹனுமா விஹாரி வரும் 15ம் தேதி தொடங்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஹனுமன் விஹாரி, குணமடைய 4 வாரங்கள் ஆகும். 4-ஆவது டெஸ்ட் போட்டியிலும், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஹனுமன் விஹாரி இடம்பெற மாட்டார் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. 

கடைசி டெஸ்ட் போட்டியில் ஹனுமன் விஹாரிக்கு பதிலாக மயங்க் அகர்வால் களமிறக்கப்படுவார் எனவும், இடது கை பெருவிரலில் காயமடைந்த ஜடேஜாவுக்கு பதிலாக ஷர்துல் தாக்குர் விளையாடுவார் என பிசிசிஐ  வட்டாரங்கள் தெரிவிக்கிறது. 

இந்நிலையில், ஆஸி.க்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியிலிருந்து உடல்நிலை பாதிப்பு காரணமாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விலகியுள்ளார். ஏற்கெனவே ஜடேஜா, விஹாரி ஆகியோர் 4ஆவது டெஸ்டில் இருந்து விலகிய நிலையில் பும்ராவும் விலகியுள்ளார். விஹாரி, ஜடேஜா, பும்ராவுக்கு பதிலாக  4-வது டெஸ்டில் யாரை சேர்ப்பது என இந்திய அணி யோசனை நடத்தி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bumrah ruled out of test match


கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!Advertisement

கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!
Seithipunal