ஓய்வு முடிவை திரும்பப் பெறுவதாக அறிவித்தார்..  வங்தேச வீரர் தமிம் இக்பால்.! - Seithipunal
Seithipunal


சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் முடிவை திரும்ப பெறுவதாக வங்கதேச வீரர் தமிம் இக்பால் அறிவித்துள்ளார்.

வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரரான தமிம் இக்பால் நேற்று சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். இது வங்கதேச கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து தமிம் இக்பாலை வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா சந்தித்து பேசிய பிறகு தனது ஓய்வு முடிவை திரும்ப பெற்றுள்ளதாக அறிவித்துள்ளார். தற்போது இந்த தகவல் வங்கதேச ரசிகர்களிலேயே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வங்கதேச வீரர் தமிழ் இக்பால் தனது ஓய்வு முடிவை திரும்பப் பெற்றதால் இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பையில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிம் இக்பால் வங்கதேச அணிக்காக  ஒருநாள் போட்டிகளில் 14 சதங்கள் உட்பட 8313 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், 70 டெஸ்ட் போட்டிகளில் 10 சதங்களுடன் 5134 ரன்கள் எடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bangladesh cricketer Tamim Iqbal withdraw his retirement decision


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->