#IPL2023 : ஐபிஎல் மினி ஏலத்தில் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆல்ரவுண்டர்.. போட்டிபோடும் அணிகள்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் நடைபெறும் பிரம்மாண்ட கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இதுவரை 15 சீசன்கள் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் 2023ம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் ஐபிஎல் 16வது ஐபிஎல் சீசன் தொடங்கவுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இருந்து இந்திய அணி வெளியேறிய நிலையில், ரசிகர்களின் கவனம் தற்போது ஐபிஎல் தொடர் மீது திரும்பி உள்ளது. மேலும் அதற்கான பணிகளை பிசிசிஐ-யும் தொடங்கியுள்ளது. அந்த வகையில் ஐபிஎல் மினி ஏலம் வரும் டிசம்பர் 23ஆம் தேதி அன்று கொச்சியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மினி ஏலத்திற்காக ஒவ்வொரு அணியும் தங்களுடைய அணியில் இருந்து தக்கவைத்த மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பெயர் பட்டியலை நேற்று வெளியிட்டது.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆல்ரவுண்டரான கேமரூன் கிரீன் 2023 ஐபிஎல் மினி ஏலத்திற்காக பதிவு செய்துள்ளார். இவர் அதிரடி பேட்டிங் மற்றும் வேகப்பந்து வீசக்கூடிய ஆல்ரவுண்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் இந்தியா சுற்றுப்பயணத்தின் போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அதிரடி வீரர் கேமரூன் கிரீன் டி20 உலகக் கோப்பை போட்டியிலும் ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுகமாகி விளையாடியிருந்தார்.

இதனையடுத்து கொச்சியில் நடைபெறும் 2023 ஐபிஎல் ஏலத்தில் இவரை எடுக்க அதிக போட்டி நிலவும் என கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Australian all-rounder Cameron green register IPL mini auction


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->