ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் விபத்தில் பலி.! சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்.!! - Seithipunal
Seithipunal


சென்னை ஷெனாய் நகரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், அமெரிக்காவில் பணியாற்றி வந்தார். இவர், கடந்த 2010ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீச்சல் பிரிவில் தங்கம் வென்றவர்.

கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவில் பணிபுரிந்து வரும் பாலகிருஷ்ணன் சில நாட்களுக்கு முன் விடுமுறையில் சென்னை வந்துள்ளார். நேற்றிரவு தோழி ஒருவருடன் காரில் சென்றுள்ளார். அப்போது அவருடைய கார் சென்ற வழியில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. 

அப்போது ஜல்லிக்கலவை ஏற்றி வந்த லாரியை முந்த முயன்றபோது கார் நிலைதடுமாறி லாரிக்கு அடியில் சென்றது. இதில் சம்பவ இடத்திலே பாலகிருஷ்ணன் உயிரிழந்தார். அவருடன் காரில் வந்த தோழி படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. அவருடைய உடல்நிலை கவலைகிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

English Summary

asian games gold winner death in road accident


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal