#IPL_Breaking: டாஸை வென்ற ஆர்.சி.பி... 10 வருட பனிப்போரை நிறைவு செய்யுமா பெங்களூர்?..! சென்னையில் வெற்றி யாருக்கு?..!! - Seithipunal
Seithipunal


டாஸை வென்ற ஆர்.சி.பி அணி பீல்டிங் செய்ய தயாராகியுள்ளது. இன்றைய ஐ.பி.எல் முதல் ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர். மேலும், ஆர்.சி.பி - எம்.ஐயுடன் கொண்ட பழைய கணக்கை தீர்க்குமா? எனவும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர். 

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்திருந்த ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 9 ஆம் தேதியான இன்று முதல் தொடங்குகிறது. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் களம்காண்கிறது. 

முதல் போட்டியிலேயே இருபெரும் அணிகள் மோதிக்கொள்வதால், இன்றைய போட்டியானது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இரண்டு அணிகளும் தங்களின் வெற்றியை உறுதி செய்ய கடுமையான போராட்டத்தையே விளையாட்டு மைதானத்தில் நடத்தலாம் எனவும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர். 

தற்போது, கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், கிரிக்கெட் மைதானங்களில் ரசிகர்கள் அனுமதி செய்யப்படவில்லை. இதனால் விளையாட்டு வீரர்களும், கிரிக்கெட் ரசிகர்களும் சோகத்திற்கு உள்ளாகியிருந்தாலும், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அனைவரும் வீட்டில் இருந்தபடி கிரிக்கெட் போட்டியை பார்க்க தயாராகிவிட்டனர். 

இன்றைய மும்பை இந்தியன்ஸ் Vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னையில் உள்ள எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் சார்பாக ரோஹித் சர்மா (கேப்டன்), ஆதித்யா தாரே, அனுகுல் ராய், அன்மோல்பிரீத் சிங், கிரிஸ் லின், தவால் குல்கர்னி, ஹார்டிக் பாண்ட்யா, இஷான் கிஷன், ஜஸ்பிரீத் பும்ரா, ஜெயந்த் யாதவ், கீரோன் பொல்லார்ட், கிருனல் பாண்டியா, மொஹ்சின் கான், குயின்டன் டி கோக், ஜேம்ஸ் நீஷாம், மார்கோ ஜான்சன், அர்ஜுன் டெண்டுல்கர் ஆகியோர் களமிறங்குகின்றனர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணியின் சார்பாக விராட் கோலி (கேப்டன்), ஏபி டிவில்லியர்ஸ், ஆடம் ஜம்பா, தேவதூத் படிக்கல், கேன் ரிச்சர்ட்சன், முகமது சிராஜ், நவ்தீப் சைனி, பவன் தேஷ்பாண்டே, ஷாபாஸ் அகமது, வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், டேனியல் சாம்ஸ், ஹர்ஷல் படேல், க்ளென் மேக்ஸ்வெல், சச்சின் பேபி, ராஜத் பட்டீதர், முகமது அஷருதீன், கைல் ஜேமிசன், டான் கிரிஸ்டியன், ஃபைன் பிரையன் ஆகியோர் களமிறங்குகின்றனர். 

இந்நிலையில், போட்டியின் துவக்கத்தில் வழக்கம்போல டாஸ் போடப்பட்டது. இதில் டாஸை வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி பீல்டிங்கை தேர்வு செய்ததை தொடர்ந்து, மும்பை அணி பேட்டிங் செய்கிறது. இன்றைய ஆட்டம் சூடுபிடிக்க நடக்க இருப்பதால், ரசிகர்கள் அனைவரும் போட்டியை காண ஆவலுடன் காத்துகொண்டு உள்ளனர். மேலும், ஆர்.சி.பி - எம்.ஐ அணியுடன் கொண்ட 10 வருட பனிப்போரை இந்த போட்டியில் நிறைவு செய்து வெற்றிவாகை சூடுமா? என்பதை காத்திருந்து உறுதி செய்யலாம்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

9 April 2021 IPL 2021 Match MI Vs RCB Today Won Toss Select


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->