அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் நடத்துவதில் சிக்கல்?.. வெளியான அதிர்ச்சி தகவல்.! - Seithipunal
Seithipunal


வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி அடுத்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரை வெளிநாட்டில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் நடைபெறும் மிகப்பெரிய டி20 கிரிக்கெட் தொடர் ஐபிஎல். இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் பிரபலமானது. சர்வதேச போட்டிகளை விட ஐபிஎல் போட்டிகளுக்கு இந்திய ரசிகர்கள் அதிகம் முக்கியத்துவம் கொடுத்து பார்க்கின்றனர்.

இந்த ஐபிஎல் தொடர் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறுகிறது. இதுவரை 16 சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில், அடுத்த ஆண்டுக்கான 17வது சீசன் ஐபிஎல் தொடரை இந்தியாவில் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு மே மாதம் மக்களவைத் தேர்தல் பல கட்டமாக நடைபெற உள்ளது. மேலும் ஜூன் மாதத்தில் டி20 உலக கோப்பை தொடர் நடைபெறுகிறது. இதனால் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் டி20 கிரிக்கெட் தொடரை தேர்தலுக்கு முன்பே நடத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

ஆனால் டி20 உலக கோப்பை தொடருக்கு முன்பே வீரர்களுக்கு 2 வாருங்கள் ஓய்வு கொடுக்க வேண்டும் என ஐசிசி தெரிவித்துள்ளது. எனவே மே 19ஆம் தேதிக்குள் ஐபிஎல் தொடர் முடிக்கப்பட வேண்டும். அதன்படி மே 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்று இறுதிப்போட்டி நடக்கும் வகையில் அட்டவணை தயாரிக்கப்படும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் காரணமாக அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரை வெளிநாட்டில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுருப்பதாக கூறப்படுகிறது. இதே போல் கடந்த 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது தென்னாப்பிரிக்காவில் நடத்தப்பட்டது. மேலும் கொரோனாவ காரணமாக கடந்த 2014 ஆம் ஆண்டு பாதி போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2024 IPL season Play in abroad


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->