#2018-க்கு விடைகொடுப்போம்: விளையாட்டுத்துறையில் 2018 ல் சாதித்த ஜாம்பவான்கள் ! ஓர் பார்வை!! - Seithipunal
Seithipunal


இந்த ஆண்டு விளையாட்டுத்துறையில் சாதித்த ஜாம்பவான்கள் பற்றி தெரிந்துகொள்வோம்.  

ஜனவரி: ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட்டில் விதர்பா அணி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. 

* நியூசிலாந்து வீரர் முண்ரோ டி20 கிரிக்கெட் வரலாற்றில் மூன்று சதங்கள் அடித்து சாதனை படைத்தார்.

* துருக்கியில் நடைபெற்ற சர்வதேச பனிச்சறுக்கு போட்டியில் இந்தியாவின் ஆஞ்சல் தாகூர் வெண்கலப்பதக்கம் வென்று இந்தியாவின் முதல் வீராங்கனை என்ற வரலாற்று சாதனை படைத்தார்.

* 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் உலகக் கோப்பை போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி அபார வெற்றி பெற்றது.

* சையது முஸ்டாக் அலி டிராபி போட்டியில் டெல்லி அணியின் ரிஷப் பன்ட் 32 பந்தில் சதம் அடித்து சாதனை படைத்தார்.

* ஒரே ஓவரில் 37 ரன்கள் குவித்து தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஜேபி டுமினி சாதனை படைத்தார்.

பிப்ரவரி :  

* ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 400 வீரர்களை, விக்கெட் கீப்பராக ஆட்டமிழக்க செய்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை தோனி படைத்தார். 

* தென்னாப்பிரிக்கா மண்ணில் முதல்முறையாக ஒருநாள் போட்டி தொடரை கைப்பற்றி, விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வரலாற்று சாதனை படைத்தது.

* அதிக வயதில், சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் முதலிடம் பிடித்து சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் ஃபெடரர் புதிய சாதனை படைத்தார்.

மார்ச் :

* 65 கிலோ பிரிவிலான ஆசிய மல்யுத்தப் போட்டியில் ஜப்பான் நாட்டை சேர்ந்த மியா இமாயை வீழ்த்தி, இந்திய வீராங்கனை நவ்ஜாத் கவுர் தங்கப்பதக்கத்தை வென்றார்.

* டி20 கிரிக்கெட் போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை ரோகித் ஷர்மா நிகழ்த்தினார்.

* 21ஆவது காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்திய வீராங்கனை சைகோம் மீராபாய் சானு தங்கப்பதக்கம் வென்றார்.

* ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 21ஆவது காமன் வெல்த் போட்டியில் பள+ தூக்குதல் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீரர் சதீஷ் குமார் சிவலிங்கம் தங்கப்பதக்கம் வென்றார்.

ஏப்ரல்:

* ஐ.பி.எல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த கவுதம் கம்பீர், அந்தப் பதவியிலிருந்து விலகினார்.

* காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால் தங்கப்பதக்கம் வென்றார்.

மே : 

* தென்னாப்பிரிக்க வீரர் ஏபி டி வில்லியர்ஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

* மூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாதனை படைத்தது.

ஜூன்: 
* மும்பையில் நடைபெற்ற இன்டர்கான்டினென்டல் கோப்பை கால்பந்து போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இதர மாதங்களை அடுத்த பதிவில் பதிவிடுகிறோம். 

நன்றி : நித்ரா


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2018 Year Memory : Sports


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->