நாளை வியாழன்.. பணம் படிப்படியாக இரட்டிப்பாக... வியாழக்கிழமைகளில் இதை செய்யுங்கள்.! - Seithipunal
Seithipunal


செல்வம் பலமடங்கு பெருகவும்... 

நாம் சேமித்து வைத்துள்ள செல்வத்தை பாதுகாக்கவும்... 

எப்போதும் நம் வீட்டில் செல்வம் நிலைத்திருக்கவும்... 

நமது வீட்டிற்கு எப்போதும் செல்வத்தை ஈர்க்கும் சக்தி கிடைப்பதற்கும்...

என்ன செய்ய வேண்டும்? அதை எப்படி செய்தால் செல்வத்தை நம்மிடம் தக்க வைக்க முடியும்? என்பதை தெரிந்து கொள்வோம். 

குபேர விளக்கு பூஜை வழிபாடு :

செல்வச் செழிப்பான கடவுள் குபேர கடவுள். அவர் மற்ற கடவுள்களின் செல்வங்களை எல்லாம் பாதுகாத்து இரட்டிப்பாக பெருக்கி கொடுப்பார். நம்மிடம் செல்வம் பெருகிக் கொண்டே இருக்கவும், நம்மிடம் இருக்கும் செல்வத்தை குபேர கடவுள் பாதுகாத்து அதனை பல மடங்காக பெருக்கி கொடுக்கவும் நாம் குபேரருக்கு செய்ய வேண்டிய ஒரு உகந்த வழிபாடுதான் இந்த மகாலட்சுமி குபேர விளக்கு பூஜை வழிபாடு. 

குபேரருக்கு உகந்த நாளான வியாழக்கிழமை அன்று இந்த விளக்கு பூஜையை நாம் செய்ய வேண்டும். இந்த பூஜைக்கு நாம் குபேர விளக்கை பயன்படுத்த வேண்டும். உங்களுக்கு குபேர விளக்கு கிடைக்கவில்லை என்றாலும், அகல் விளக்கில் விளக்கை ஏற்றி இந்த பூஜையை பின்பற்றலாம். 

குபேரருக்கு உகந்த திசை வடக்கு. ஆகையால் பூஜை அறையில் வடக்கு திசை நோக்கி ஏற்ற வேண்டும். ஒவ்வொரு வியாழக்கிழமையும் மாலை 5 மணியிலிருந்து 8 மணிக்குள் இந்த விளக்கை ஏற்றினால் அது மிகவும் விசேஷம். 

முதலில் குபேர விளக்கிற்கும், குபேர விளக்கு வைக்கும் மனை அல்லது தட்டிற்கு ஒற்றைப்படையில் மஞ்சள் குங்கும பொட்டு வைக்க வேண்டும். பிறகு குபேர விளக்கு வைக்கும் தட்டில் சிறிதளவு பச்சரிசியை வைக்க வேண்டும். பச்சரிசி மகாலட்சுமியின் அம்சம் என்பது குறிப்பிடத்தக்கது. 

குபேரருக்கு விசேஷமான எண் 5. எனவே ஐந்து ரூபாய் நாணயத்தை பச்சரிசியில் வைக்க வேண்டும். குபேர விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து பச்சை நிறத்தில் உள்ள திரியால் குபேர விளக்கு ஏற்றினால் மிகவும் சிறந்த பயனளிக்கும். 

பச்சை நிற திரி இல்லை எனில் பஞ்சு திரி வைத்தும் விளக்கு ஏற்றலாம். குபேர விளக்கில் ஐந்து கற்கண்டு சேர்க்க வேண்டும். கற்கண்டு சேர்ப்பதனால் பணவரவு அதிகரிக்கும். விளக்கை சுற்றி வாசனை மலர்கள் வைக்க வேண்டும். குபேர விளக்கை ஏற்றிய பின்னர் நம் வீட்டின் நிலை வாசலில் இடதுபுறம் வடக்கு நோக்கி வைக்க வேண்டும். 

வடக்கு திசை தெரியவில்லை எனில் கிழக்கு நோக்கியும் ஏற்றலாம். கிழக்கு திசை சூரிய பகவானுக்கு உகந்த திசை. நாம் எந்த கடவுளை நினைத்து விளக்கு ஏற்றினாலும் கிழக்கு திசை நோக்கி ஏற்றினால் சூரிய பகவான் அதற்கு உரிய கடவுளின் அருளை நமக்கு பெற்றுத் தருவார். 

ஏன் இந்த விளக்கை நிலை வாசலில் ஏற்ற வேண்டும்?

குபேரர் மற்ற கடவுளின் செல்வங்களுக்கு எல்லாம் பாதுகாவலர். அவரை வாசலில் வைத்து பூஜித்தால் நமது செல்வத்திற்கும் பாதுகாவலாக இருப்பார். 

விளக்கை ஏற்றும்போது குபேர மந்திரத்தை மனதில் உச்சரித்துக் கொண்டு ஏற்றினால் மிகவும் நல்லது.

'ஸ்ரீமகாலட்சுமி குபேராய நமஹ" 

எனும் குபேர மந்திரத்தை மனதில் பக்தியுடன் உச்சரித்து கொண்டே இந்த விளக்கை ஏற்றி வர உங்கள் குடும்பத்தில் பணம் செழிப்புடன் வந்து கொண்டிருக்கும். 

ஒவ்வொரு வியாழக்கிழமையும் மாலை 5 மணியிலிருந்து 8 மணிக்குள் உங்கள் வீட்டு நிலை வாசற்படியில் இவ்வாறு வடக்கு திசை நோக்கி குபேர விளக்கு ஏற்றி வர உங்கள் வீட்டில் எப்போதும் செல்வம் குறையாமல் பெருகிக் கொண்டே இருக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thursday special For doubling money


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->