பொங்கலோ பொங்கல்.. எத்திசையில் பொங்கி வழிந்தால் என்ன பலன்?! - Seithipunal
Seithipunal


பொங்கல் எத்திசையில் பொங்கி வழிந்தால் என்ன பலன்?

தை மாதம் முதல் நாள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை என்பது அறுவடைத் திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது ஆன்றோர் வாக்கு. ஆண்டு முழுவதும் நமக்கு உதவி புரியும் இயற்கைக்கும், விவசாயத்திற்கு பயன்படும் கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் நாளாக பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்கிறோம்.

தைத்திருநாளில் இதுவரை இருந்துவந்த துன்பங்கள் நீங்கி நல்வழி பிறக்கும் என்ற நம்பிக்கையோடு இந்த பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

சிறப்புமிக்க பொங்கல் :

பொங்கல் தினத்தன்று வீட்டின் வாசலில் வண்ணக்கோலமிட்டு, அதன்மீது அடுப்புக்கூட்டி அதில் புதிய பானை வைக்கப்பட்டு அதற்கு பொட்டு வைத்து, பானைக்குப் புதிய மஞ்சளைக் காப்பாக கட்டுவார்கள். சாணத்தில் பிள்ளையார் பிடித்தும் வைப்பார்கள். பொங்கலின் சிறப்பே கரும்பும், மஞ்சள் கொத்தும் ஆகும். மஞ்சள் கொத்தையும், கரும்பையும், புதிய காய்கறிகளையும் அன்று பயன்படுத்துவர். கோலமிட்ட இடத்தில் தலைவாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி, கதிரவனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவர்.

புதிய பானையில் இருந்து பால் பொங்கி வருவதால், தை பிறந்துள்ள நாள் முதல் அந்த ஆண்டு முழுவதும் நம் வாழ்வும், வளமும் அந்தப் பால் போன்று பொங்கி சிறக்கும். மகிழ்ச்சியும், திளைப்பும் ஒருசேரப் பல்கிப் பெருகுவதோடு, கழனியெல்லாம் பெருகி, அறுவடை மென்மேலும் அதிகரிக்கும் என்பதே இந்தப் பண்டிகையின் மேலோங்கிய தத்துவமும், தொன்றுதொட்டு வரும் நம்பிக்கையுமாகும்.

பொங்கல் எத்திசையில் பொங்கி வழிந்தால் என்ன பலன்?

வடக்கு திசையில் பொங்கினால் பணவரவு.

தெற்கு திசையில் பொங்கினால் செலவு.

கிழக்கு திசையில் பொங்கினால் சுபகாரியங்கள் இனிதே நடைபெறும்.

மேற்கு திசையில் பொங்கினால் மகிழ்ச்சி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pongal endha pakkam vazhindhal enna payan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->