முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்க செய்ய வேண்டிய தானம்...! - Seithipunal
Seithipunal


முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்க செய்ய வேண்டிய தானம்;

பித்ருக்கள் மனமகிழ்ச்சியோடு இருக்க வேண்டுமென்றால் முன்னோர்களது வழிபாட்டை நாம் தொடர்ந்து செய்ய வேண்டும். 

மாதந்தோறும் வரக்கூடிய அமாவாசை தினத்தில் அவர்களுக்கு செய்ய வேண்டிய வழிபாட்டு முறையை தடைபடாமல் செய்து வரவேண்டும். வருடம் தோறும் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய திதி தர்ப்பணங்களை சரியாக கொடுத்து வர வேண்டும்.

இதோடு மட்டுமல்லாமல் தினமும் காலையில் எழுந்து தீபம் ஏற்றி குலதெய்வம் மற்றும் நம்மை விட்டு மறைந்து சென்ற முன்னோர்களை எல்லாம் ஒரு முறை மனதார நினைத்துக்கொண்டு அன்றைய நாளை தொடங்குவது நமக்கு மிக மிக நல்ல பலன்களை கொடுக்கும். 

ஒவ்வொரு நாளும் முன்னோர்களை நாம் நினைவு கூறும்போது, அவர்களின் ஆசீர்வாதத்தால் நம்முடைய குடும்பம் சீரும் சிறப்புமாக இருக்கும். பித்ருக்களை மகிழ்விக்க, பித்ரு தோஷம் நீங்க, பித்ரு சாபம் நீங்க சாஸ்திர ரீதியாக நமக்கு எத்தனையோ பரிகார முறைகள் சொல்லப்பட்டுள்ளது. அந்த வரிசையில் இன்று ஒரு சிறப்பான தானம் தான் இது...! 

பலா தானம் :

மா, பலா, வாழை, இந்த முக்கனிகளில் ஒரு பழம் தான் இந்த பலா பழம். பலாப்பழத்தினை தானமாக கொடுத்தால் நம் முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடையும் என்றும், அவர்களுடைய ஆசீர்வாதத்தை நம்மால் முழுமையாகப் பெற முடியும் என்று சொல்கிறது சாஸ்திரம். 

ஒரு அமாவாசை நாளன்று அல்லது உங்களுடைய முன்னோர்கள் இறந்த திதி அன்று ஒரு முழு பலாப்பழத்தை வாங்கி யாருக்கேனும் தானமாக கொடுக்க வேண்டும். ஒரு பலாப்பழத்தை தானம் செய்தால் 600 வகையான காய்கனிகளை தானம் செய்த புண்ணியம் நம்மை வந்து சேரும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. 

வாழ்நாளில் ஒருவரால் 600 வகையான காய்கனிகளை ஒரே சமயத்தில் வாங்கி தானம் கொடுப்பது என்பது இயலாத காரியம். ஆனால் அந்த 600 காய்கனிகளை தானம் செய்த புண்ணியத்தை நமக்கு ஒருசேர கொடுப்பதுதான் இந்த பலாப்பழம். 

ஆகவே, சிறிய அளவில் இருக்கும் பலாப்பழமோ... பெரிய அளவில் இருக்கும் பலாப்பழமோ... அது உங்களுடைய சௌகரியம். முழுமையாக இருக்கும் பழுத்த கனியை வாங்கி 

கோவிலுக்கு தானமாக கொடுக்கலாம். 

ஒரு பிராமணருக்கு தானமாக கொடுக்கலாம். 

இயலாத ஏழை எளிய மக்களுக்கு தானமாக கொடுக்கலாம். 

ஆசிரமங்களுக்கு, முதியோர் இல்லத்திற்கு கூட தானமாக கொடுக்கலாம். அது அவரவர் விருப்பம். 

இப்படி ஏதாவது ஒரு இடத்தில் தானம் செய்தால் போதும்.

வாழ்நாளில் ஒரே ஒரு முறை முன்னோர்களை நினைத்து இந்த பழத்தை தானமாக கொடுத்து விடுங்கள். உங்களுடைய முன்னோர்களின் ஆத்மா உங்களை மனதார வாழ்த்தும். கோடான கோடி புண்ணியம் உங்களை வந்து சேரும். 

புண்ணிய காரியங்களுக்காக நாம் செய்யப்படும் தானம் பணிவோடு இருக்க வேண்டும். கொடுப்பவர்களின் கை மேலே ஓங்கி இருக்கக்கூடாது. தலைகுனிந்து தாழ்ந்து, பணிவோடு தானத்தை செய்வதன் மூலமாக மட்டுமே நம்மால் பலனை பெற முடியும். தானம் கொடுப்பதால் நாம் என்றுமே பெரிய மனிதர்கள் ஆகிவிட முடியாது. 

தானத்தை பெறுபவர்கள் மனநிறைவோடு, நாம் கொடுக்கும் தானத்தை பெற்று மனதார வாழ்த்தினால் தான் நமக்கு புண்ணியம் வந்து சேரும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். 

பணிவோடு, பக்தியோடு, தானத்தை பெறுபவர்களை கடவுளாக பாவித்து தானம் செய்வது தான் தானத்திற்கு உண்டான பலனை பெற்றுத்தரும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Munnorgal aasipera seyyavendiya dhanam


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->