சிதம்பரம்: நடராஜர் கோயிலில் வரும் 9-ம் தேதி சிறப்பு பூஜைகளுடன் மகா ருத்ர மகாபிஷேகம்! - Seithipunal
Seithipunal


சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் சிவகாமிசுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு வருகின்ற செப்டம்பர் 9-ஆம் தேதி மகா ருத்ர ஹோமம் மற்றும் ஸகல திரவிய மஹாபிஷேகம் நடைபெற உள்ளது.

உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் ஐம்பூதத் தலங்களில் ஆகாய ஸ்தலமாக விளங்கும் சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜ ராஜமூர்த்திக்கு வருடத்திற்கு ஆறு முறை மகா அபிஷேகம் நடைபெற உள்ளது.

இதில், வருகின்ற செப்டம்பர் 9-ஆம் தேதி மகா அபிஷேகமும், செப்7-ம் தேதி காலையில் கணபதி ஹோமமும், அன்று மாலை சிகாம சுந்தரி ஆனந்த நடராஜமூர்த்திக்கு அனுக்ஞை பூஜையும் நடைபெற உள்ளது.

இதனை தொடர்ந்து, வருகின்ற 8-ஆம் தேதி காலையில்  நவகிரக ஹோமமும், அன்று மாலை ஆசார்யவர்ணமும், மதுபர்க்கம்  அங்குரமும், பிரதிசரமும், ரக்ஷா பந்தனமும், ஸ்ரீதனபூஜையும் நடைபெற உள்ளது.

மேலும், வருகின்ற 9-ஆம் தேதி காலை விசேஷ ரகசிய பூஜையும், லஷார்ச்சனை கட ஸ்தாபனமும், மகா ருத்ர ஜபமும், மகா ருத்ர ஹோமமும், மகா தீபாராதனையும் அன்று நண்பகல் வஸோர்த்தாரை ஹோமமும் நடைபெற உள்ளது.

இதனை தொடர்ந்து, மஹாபூர்ணாஹீதி,  வடுக பூஜை, கன்யா பூஜை, ஸ்வாசினி பூஜை, தம்பதி பூஜை, கோ பூஜை, கஜபூஜை, அஸ்வ பூஜை, மஹா தீபாராதனை ஆகிய பூஜைகளும் நடைபெற உள்ளது.

இதன் பின்னர், மாலை 6 மணிக்கு கடயாத்ராதானம் புறப்பட்டு, கனகசபையில் ஸ்ரீமந் ஆனந்த நடராஜமூர்த்தி மற்றும் சிவகாமசுந்தரிக்கு சகல திரவிய மஹாபிஷேகம் நடைபெற உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maha Rudra Mahabhishekam Chidambaram Nataraja Temple on sep 9th


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->