வருகிறது மாசிமகம்... புனித நீராடல்.. மாசிமக சிறப்பு வாய்ந்த வழிபாடுகள்..!! - Seithipunal
Seithipunal


மாசியில் காவிரி முதலான நீர்நிலைகளில் நீராடினாலே புண்ணியம். அதிலும் மாசி மாதத்தின் மக நட்சத்திர நாளில், நீராடுவது மகத்தான புண்ணியங்களைச் சேர்க்கும்.

மாசிமகம் என்றாலே வடக்கே நடைபெறுகிற கும்பமேளாவும், தெற்கே கும்பகோணத்தில் நடைபெறுகிற மகாமகத் திருவிழாவும் தான் நம் நினைவிற்கு வரும்.

மகாவிஷ்ணு வழிபாடு :

மாசிமாதம் மகாவிஷ்ணுவிற்கான மாதமாகும். எனவே, இம்மாதம் முழுவதும் மகாவிஷ்ணுவை அதிகாலையில் துளசியால் அர்ச்சித்து வழிபட்டால் வாழ்வில் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெருகும்.

இந்நாளில் விரதமிருந்து, நீர்நிலைகளில் நீராடி விஷ்ணுவை வழிபட்டால் இந்தப் பிறப்பு மட்டுமல்லாமல் முன் ஜென்மங்களில் செய்த பாவங்கள் அனைத்தும் விலகியோடும். மேலும், சகல நலன்களையும் பெற்று வளமான வாழ்க்கை அமையும்.

தாமரை மணிமாலை இருக்கும் இடத்தைச் சுற்றிலும் நல்ல விஷயங்களே நடக்கும்.

தாமரை மணிமாலைக்கு பணத்தை வசீகரிக்கும் சக்தி உண்டு.

குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனை, பொருளாதாரத்தில் நலிவு போன்ற பலவற்றுக்கும் தீர்வை அளிக்கிறது தாமரை மணிமாலை.

சைவக் கோயில்கள் மட்டுமின்றி, வைணவக் கோயில்களிலும் மாசிமகத்தின் போது விசேஷ வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக கோவில் நகரம் என்றழைக்கப்படும் கும்பகோணத்தில் அமைந்துள்ள பெருமாள் கோவில்களில் காலையில் இருந்தே சிறப்பு வழிபாடுகளும், பூஜைகளும் வெகு விமர்சையாக நடைபெறும்.

மகாவிஷ்ணு காயத்ரி மந்திரம் :

ஓம் நாராயணாய வித்மஹே

வாஸஷுதேவாய தீமஹி

தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத்

குலதெய்வ வழிபாடு : 

மாசிமகத்தன்று குலதெய்வத்தை வழிபாடு செய்வதால் குலதெய்வம் மனம் மகிழ்ந்து நம் குலத்தைக் காக்கும், வாழ்வாங்கு வாழ வைக்கும், வம்சம் வாழையடி வாழையென தழைத்து வளரும். 

மாசி மாதம் மகம் நட்சத்திரம் மற்றும் நிறைந்த பௌர்ணமி நாளில் இல்லத்தை சுத்தமாக்கி விளக்கேற்றி, மாவிளக்கிட்டு படையலிட்டு குலதெய்வத்தை வழிபட வேண்டும்.

மேலும் அருகில் உள்ள சிவன் மற்றும் பெருமாள் கோயிலுக்கு சென்று சிவனையும், பெருமாளையும் மனதார வழிபட்டால் பிறவிப்பயனை அடையலாம். வழக்கு முதலான சிக்கல்களில் இருந்து விடுபடலாம். இவ்வாறு செய்வதால் குடும்பத்தில் தீயசக்திகள் அண்டாமல் குலதெய்வம் நம்மைக் காத்தருளும். 

இந்நாளில் விரதம் இருந்து குலதெய்வம், இஷ்ட தெய்வங்களை வணங்கி பலவிதமான தானம் செய்யலாம். இவ்வாறு தானம் செய்வதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமையும், சகல தோஷங்களும் நீங்கும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

maasi magam 4


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->