பொறுமையும், நிதானமும் கொண்ட  ராசிகாரர்களுக்கு..தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் - Seithipunal
Seithipunal


சுபகிருது வருடம் 2022-2023..தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள்

பொறுமையும், நிதானமும் கொண்ட கும்ப ராசி அன்பர்களே!!

பலன்கள் :

பூர்வீக சொத்துக்களை மாற்றி அமைப்பீர்கள். தந்தை வழியில் எதிர்பாராத சில விரயங்கள் ஏற்பட்டு நீங்கும். புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணிகளை மேற்கொள்வதற்கான உதவிகள் கிடைக்கும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

ஆரோக்கியம் மற்றும் பொருளாதாரம் :

உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். செய்யும் செயல்களில் சிந்தித்து செயல்பட வேண்டும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்ப்பது நல்லது. முழங்கால் மற்றும் மூட்டு தொடர்பான வலிகள் ஏற்பட்டு நீங்கும்.

பெண்களுக்கு :

எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்படும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். குலதெய்வ பிரார்த்தனை தொடர்பான முயற்சிகள் நிறைவேறும். வாழ்க்கைத்துணைவர் வழியில் ஆதரவான சூழ்நிலை காணப்படும்.

மாணவர்களுக்கு :

மாணவர்களுக்கு பிறமொழி மீதான ஆர்வமும், ஈடுபாடும் அதிகரிக்கும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். வங்கி சார்ந்த தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு :

உத்தியோக பணிகளில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். தந்தையாரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பிடிவாத குணத்தை மாற்றி கொள்வதன் மூலம் சாதகமான வாய்ப்புகளை ஏற்படுத்த முடியும். பணிகளை விரைந்து செய்வதன் மூலம் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.

வியாபாரிகளுக்கு :

வர்த்தகம் தொடர்பான பணிகளில் விழிப்புணர்வு அவசியம். வெளிநாட்டு வாய்ப்புகள் மற்றும் பயணங்கள் கைகூடும். அனுபவமிக்க வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கட்டிடம் சார்ந்த துறைகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். வெளிநாட்டு பொருட்கள் மூலம் ஆதாயம் ஏற்படும்.

விவசாயிகளுக்கு :

புதிய பயிர் விளைச்சலில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். மரக்கன்று தொடர்பான பணிகளில் லாபங்கள் அதிகரிக்கும். பிறமொழி பேசும் மக்களின் ஆதரவு கிடைக்கும். புதிய தோட்டம் வாங்குவதற்கான சூழ்நிலைகள் அமையும்.

அரசியல்வாதிகளுக்கு :

பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான எண்ணங்களும், ஆர்வமும் அதிகரிக்கும். பேச்சுக்களில் பொறுமையும், சரியான அளவுடன் பேசுவதும் உங்களின் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து செல்வாக்கை மேம்படுத்துவீர்கள்.

கலைஞர்களுக்கு :

கலை சார்ந்த துறைகளில் மூத்த கலைஞர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். நகைச்சுவையான பேச்சுக்களின் மூலம் செல்வாக்கு அடைவீர்கள். இசை சார்ந்த துறைகளில் புதுவிதமான நுட்பங்களை அறிந்து கொள்வீர்கள்.

ஆலோசனை :

எந்தவொரு செயலிலும் முன்கோபமின்றி, நிதானமான சிந்தனையுடன் செயல்படுவது முன்னேற்றத்தை உருவாக்கும்.

வழிபாடு :

பெருமாளை வழிபாடு செய்து வர சிந்தனையில் தெளிவும், உத்வேகமும் ஏற்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kumba rasi Tamil new year Rasipalankal


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->