உங்கள் வேண்டுதல் நிறைவேற வேண்டுமா? உடனே இதை படிங்க.! - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு கோவிலிலும் மூலவர் என்று ஒருவர் உண்டு. அவரைச் சுற்றி நிறைய உப தெய்வங்கள் இருக்கும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனக்கவலைகள் இருக்கும். நம் மனதில் இருக்கும் குறைகளை இறைவனிடம் கூறி, குறைகள் நீங்கி வளமான வாழ்வு அமைய வேண்டும் என்று பக்தர்கள் வேண்டுவார்கள்.

இவ்வாறு நம் மனக்குறைகளை கடவுளிடம் கூறும் போது சில நெறிமுறைகளை மனதில் கொண்டு, அதன்படி இறைவனை வணங்கி வேண்டினால் நாம் வேண்டியது நிறைவேறும்.

கோவிலில் உள் சென்றதும் முதலில் கொடிமரத்தை வணங்க வேண்டும்.

அதன் பின் மூலவரை வணங்க வேண்டும். பின்பு உப தெய்வங்களை வணங்கி வலம் வர வேண்டும்.

அவ்வாறு உப தெய்வங்களை வணங்கி வலம் வரும்போது இருகைகளை கூப்பி, கைகளை முகவாயில் தாங்கி, கைகளை நெஞ்சுப் பகுதியில் வைத்து வணங்கி வேண்டுதலைச் சொல்ல வேண்டும்.

வேண்டுதலை சொல்லும்போது மௌனமாக மனதுக்குள் மட்டுமே சொல்லி வேண்ட வேண்டும்.

கண்களை மூடாமல் வேண்ட வேண்டும். கண்களை மூடிக் கொண்டு வேண்டுதல் கூடாது.

உப தெய்வங்கள் உள்ள இடத்தில் கை கூப்பி வணங்கி வர வேண்டுமே தவிர, கீழே விழுந்து வணங்கக்கூடாது.

மூலவர் சந்நிதானத்தில் விழுந்து வணங்கக்கூடாது.

எல்லா தெய்வத்தையும் வணங்கிவிட்டு மீண்டும் கொடிமரம் பக்கம் வர வேண்டும்.

கொடிமரம் முன்னால் நின்று மூலவரைப் பார்த்து வணங்கி சாஷ்டாங்கமாக கீழே விழுந்து வணங்க வேண்டும்.

கிழக்கு அல்லது மேற்கு திசை நோக்கிய கோவிலில் வடக்கு நோக்கி தலையை வைத்து வணங்க வேண்டும்.

வடக்கு அல்லது தெற்கு பார்த்த கோவில்களில் கிழக்கு நோக்கி தலை வைத்து வணங்க வேண்டும்.

இவ்வாறு வணங்கிவிட்டு சிறிது நேரம் படிகளில் அமர வேண்டும். அமர்ந்தபடியே உங்கள் வேண்டுதல்களை மௌனமாக கோரிக்கையாக சொல்லலாம்.

அதன்பின் கோவிலை விட்டு வெளியே வந்த பின்பு கோபுரத்தை நோக்கி வணங்க வேண்டும். கோபுரத்தை வணங்கினால் கோடி புண்ணியம் கிடைக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kovilil vazhipadum murai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->