ஆள்காட்டி விரல் இப்படி இருந்தால் உயர்ந்த பதவி வகிப்பார்கள்.!! - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு கையிலும் ஐந்து விரல்கள் காணப்படும். இவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு. இன்று ஆள்காட்டி விரலை பற்றி தெரிந்துக் கொள்வோம்.

ஆள்காட்டி விரல் பிறரை சுட்டிக்காட்ட உதவுவதால் இப்பெயர் ஏற்பட்டது. இது குரு மேட்டிற்கு மேலே அமைந்து இருப்பதால் இதை குருவிரல் என்றும் சொல்வது உண்டு.

ஆள்காட்டி விரல் பாம்பு விரலை (சனி விரல்) விட உயரம் குறைவாக இருக்க வேண்டும். மோதிர விரலுக்கு (சூரிய விரல்) சமமாக இருக்க வேண்டும்.

முக்கியமாக மோதிர விரலை விட, ஆள்காட்டி விரல் சிறியதாக இருக்கும் ஆண்கள் கணிதத்தில் சிறந்தவர்களாக இருப்பார்களாம். எப்பேற்பட்ட சிக்கலான கணக்குகளுக்கும் மிகவும் விரைவாக தீர்வு காண்பார்களாம்.

உங்களுக்கு ஆள்காட்டி விரல் இப்படி இருக்கா?

ஆள்காட்டி விரல் வளைவில்லாத விரலாக இருந்தால் பிடிவாதக்காரர்களாக இருப்பார்கள். உலக அனுபவமிக்கவர். நீதி, நேர்மையுடன் வாழ்பவர்கள்.

இந்த விரல் வளைந்து இருப்பதை போல காணப்படுமேயானால் வீண் செலவுகளில் வல்லவராக இருப்பார்கள்.

இந்த விரல் பின்பக்கமாக வளையும்படியாக இருந்தால் பேசிப்பேசியே பொழுதை கழிப்பார்கள்.

இந்த விரல் உள்பக்கமாக வளைந்து இருக்குமானால் பேராசை உடையவராக இருப்பார்கள்.

இந்த விரல் பாம்பு விரல் பக்கமாக சாய்ந்து இருந்தால் பிறருடைய புத்திமதியை கேட்கமாட்டார்கள்.

கட்டை விரல் பக்கமாக வளைந்து இருந்தால் எந்த விஷயத்தையும் தன் இஷ்டப்படி தான் செய்வார்கள்.

ஆள்காட்டி விரல் மெலிந்து இருந்தால் எந்த காரியத்தையும் வேகமாக செய்ய முடியாது.

இந்த விரல் மோதிர விரலை விட உயர்ந்து இருந்தால் உயர்ந்த பதவி வகிப்பவர்களாக இருப்பார்கள். எப்போதும் முகம் களையுடன் காணப்படுவார்கள். எவ்வளவு கஷ்டமான வேலையையும் மிகவும் சுலபமாக செய்து முடித்து விடுவார்கள்.

இந்த விரல் சனி விரல் அளவுக்கு நீளமுடையதாக இருந்தால் மிகப்பெரிய பதவியை வகிப்பார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

finger astrology 2


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->