தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து, தமிழில் செய்வதே சரி-டாக்டர்.ராமதாஸ்.! - Seithipunal
Seithipunal


தஞ்சை பெரியகோயிலுக்கு தமிழில் குடமுழுக்கு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது என பாமக நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தஞ்சை பெரியகோவிலுக்கு தமிழில் குடமுழுக்கு செய்வது ஆகம விதிக்கு எதிராக இல்லை என்றும், தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து  தமிழில் குடமுழுக்கு செய்ய அரசு முன்வர வேண்டுமென்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மற்றொரு  ட்விட்டர் பதிவில், சிவபெருமான் 64 திருவிளையாடல்களை தமிழ்நாட்டில் தான் நிகழ்த்தியதாகவும், அனைத்து நிகழ்வுகளும் தமிழில் உரையாடியதாகவும் சிவனடியார்கள் கூறுகின்றனர் என்றும், அவர்களின் நம்பிக்கையை மதித்து தமிழில் குடமுழுக்கு செய்வது சரியான செயல் தானே எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

drramadoss tweet about thanjavor temple


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->