தப்பி தவறி கூட இதையெல்லாம் செய்தால், வீட்டில் வறுமை ஏற்படும்.! செய்யவே கூடாத விஷயங்கள்.! - Seithipunal
Seithipunal


ஒருவருக்கு பணம் கொடுத்தால் வாசல் படியில் நின்று கொண்டு எப்போதும் பணம் கொடுக்கக் கூடாது. 

வாசல் படிக்கு உள்ளே அல்லது வெளியில் நின்றபடி தான் பணம் கொடுத்து வாங்க வேண்டும்.

கடன், கைமாற்று உள்ளிட்டவை கொடுக்கும் போது செவ்வாய்க்கிழமையில் கொடுப்பது நல்லது. அப்பொழுதுதான் கடனை விரைவில் மீண்டும் பெற முடியும். செவ்வாய்க்கிழமை, செவ்வாய் ஓரையில் இந்த கடனை கொடுத்தால் விரைவில் பணம் கிடைக்க ஏதுவாக இருக்கும்.

வீட்டில் இருக்கும் அம்மி, ஆட்டுக்கல் உரல், வாசல் படி உள்ளிட்டவைகளில் உட்காரக் கூடாது. 

இரவு நேரங்களில் மற்றவர்களுக்கு தண்ணீர், பால், மோர் உள்ளிட்டவற்றை கொடுத்து அனுப்பக் கூடாது. 

வெற்றிலை, வாழை இலை இவற்றை வாட விடக்கூடாது.

குத்து விளக்கு தானாக அமைய விடக்கூடாது. ஊதியும் அணைக்க கூடாது. புஷ்பத்தை வைத்து அணைக்கலாம். 

யாரையும் சனியனே என்று திட்டுவதோ அல்லது வீட்டில் எழவு என்றோ கூறக்கூடாது. இது தரித்திரத்தை ஏற்படுத்தும்.

கிழிந்த உடைகளை உடுத்திக் கொண்டே இருக்கக் கூடாது. துணிகளை உடுத்தியவாறு தைக்கக் கூடாது.

தரையில் உப்பு சிந்தக்கூடாது. அரிசி கழுவும்போது அரிசி தரையில் சிந்தி விடக் கூடாது. 

விளக்கை அமர்த்துதல் அல்லது மலையேற்றுதல் என்று தான் கூற வேண்டும், விளக்கை அணைத்தல் என்ற வார்த்தையை உபயோகிக்க கூடாது. 

வீட்டில் செல்வம் அதிகரிக்க வெள்ளைப் புறாக்களை வாங்கி வளர்க்கலாம்  அத்துடன் நெல்லிக்காய், சங்கு, தாமரை, பூக்கள், பசு சா, புத்தாடைகள் உள்ளிட்டவை வீட்டில் எப்பொழுதும் ஸ்டாக் வைத்துக் கொள்வது வீட்டில் லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Do Not Do This while Giving money


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->