வருகிறது அஷ்டமி.. பைரவருக்கு பஞ்சதீப விளக்கேற்றி வழிபாடு செய்யுங்கள்..! - Seithipunal
Seithipunal


அஷ்டமியும்... பஞ்சதீப விளக்கு வழிபாடும்...!!

அஷ்டமி என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது யார் என்றால் காலபைரவர் ஆவார். பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர் என்றும் அடியார்கள் செய்த பாவங்களை நீக்குபவர் என்றும் பொருள் ஆகும்.

சிவபெருமானுடைய 64 வடிவங்களில் ஒருவராக விளங்கும் பைரவர் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து வேலைகளையும் செய்கிறார்.

எனவே இவருக்கு ஐந்து தீபங்கள் வைத்து விளக்கு ஏற்றி வழிபடும் பொழுது நமக்கு காலத்தால் தீர்க்க முடியாத எத்தகைய பிரச்சனையையும் அவர் தீர்த்து வைப்பார் என்பது நம்பிக்கை.

அவரை அஷ்டமியில் வழிபாடு செய்வது எப்படி? என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க...

பைரவர் வழிபாடு :

பைரவருக்கு மிகவும் உகந்த தினம் அஷ்டமி ஆகும். பௌர்ணமிக்கு பிறகு வரும் அஷ்டமியில் பைரவரை வழிபட்டால் அவருடைய அருளை முழுமையாகப் பெறலாம். கோவிலுக்கு சென்று பைரவரை தரிசிக்க முடியாவிட்டாலும் வீட்டிலிருந்தே பைரவரை வழிபடலாம்.

நாளை அஷ்டமி திதியில் வீட்டிலேயே தீபம் ஏற்றி மனதில் பைரவரை நினைத்து, பைரவர் மந்திரத்தை உச்சரித்து வழிபட மேன்மை உண்டாகும்.

பஞ்சதீப விளக்கு :

காலபைரவர் பஞ்ச பூதங்களையும் அடக்கி ஆள்வதால் இவருக்கு கோவிலில் பஞ்ச தீப எண்ணெய் ஊற்றி, பஞ்ச விளக்குகளை ஏற்ற வேண்டும்.

அதாவது 5 அகல் விளக்குகளை எடுத்து கொள்ளுங்கள். அதில் ஒவ்வொரு விளக்கிலும் ஒவ்வொரு வகையான எண்ணெய் ஊற்றி தனித்தனியே தீபத்தை ஏற்ற வேண்டும்.

நெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், இலுப்பை எண்ணெய் ஆகிய இந்த ஐந்து எண்ணெய்கள் தான் பஞ்ச தீப எண்ணெய்கள் என்று குறிப்பிடப்படுகிறது.

ஒவ்வொரு விளக்கிலும் இந்த ஒவ்வொரு எண்ணெய்களை ஊற்றி பஞ்சு திரி இட்டு தீபம் ஏற்றி, பைரவருடைய மந்திரத்தை 27 முறை உச்சரித்தால் எல்லா விதமான பிரச்சனைகளும் தீரும்.

இந்த நாளில் பைரவாஷ்டகம் வாசிப்பது உள்ளத்திலும், எண்ணத்திலும் நல்ல விஷயங்களை விதைக்கும். மேலும் நேர்மறை எண்ணங்கள் பெருகி குடும்பத்தில் இருக்கும் துஷ்ட சக்திகள் அத்தனையும் நீங்க செய்து எல்லா வளங்களையும், நலன்களையும் பெற்று சுபிட்சம் அடைய செய்யும்.

பலன்கள் :

நினைத்த காரியங்கள் ஈடேறும்.

பணம் சார்ந்த பிரச்சனைகள் தீரும்.

குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும்.

சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bairavar vazhipadu In ashtami 2022


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->