இன்றுடன் நிறைவு பெரும் அத்திவரதர் தரிசனம்., நாளைமுதல் புதிய கோலத்தில் அத்திவரதர்!! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் அத்தி வரதர் 40 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் அனந்த சயன கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். 

அத்திவரதர் வெளிவந்த  நாள் முதல் அனந்த சயன கோலத்தில் காட்சியளித்து வருகிறார். சயன கோலத்தில் காட்சி தரும் அத்திவரதரின்  தரிசனம் இன்றோடு நிறைவு பெறவுள்ளது. இதையயடுத்து, நாளை (ஆகஸ்டு 1 ஆம் தேதி) முதல் தரிசனத்துக்கு வரும் பக்தர்களுக்கு நின்ற கோலத்தில் அத்திவரதர்  காட்சியளிக்க உள்ளார். நாளை முதல் ஆகஸ்ட் 17 ஆம் தேதி வரை அவர் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருளளிக்க உள்ளார்.

மேலும் இந்த இது குறித்து கோவில் தலைமை பட்டாச்சாரியார் ஒருவர் கூறியதாவது, கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் அத்தி வரதர் 24 நாட்கள் அனந்த சயன கோலத்தில் காட்சியளித்து வந்தார், இதையடுத்து அடுத்த நாளை(ஆகஸ்ட் 1 ஆம் தேதி) முதல் அடுத்த 24 நாட்கள் நின்ற கோலத்திலும் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால்  அத்திவரதரின் சிலை சில இடங்களில் சிதலமடைந்துள்ளதால் நின்ற கோலத்தின் 24 காட்சியளிக்க முடியாது என்பதால் சில நாட்கள் குறைக்கப்பட்டுள்ளது.

ஏனெனில் 40 ஆண்டுகளுக்கு பின்னர் காட்சி தரும் அபூர்வமான இந்த அத்தி வரதர் இன்னும் பல வருடங்கள் கழித்தும் மக்களுக்கு அவரது அருள் கிடைக்க வேண்டி இந்து அறநிலையத்துறை மற்றும் கோவில் பட்டாச்சாரியார்கள் முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். மேலும் ஆகம விதிப்படி தற்போது வைத்துள்ள வசந்த மண்டபத்தில் இருந்து வேறு இடத்திற்கு அத்திவரதரை மாற்றம் செய்ய முடியாது ஏனெனில் ஆகம விதிப்படி வைத்துள்ள அத்தி வரதரை வேறு இடத்திற்கு மாற்றுவது முடியாது என பட்டாச்சாரியார் தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

athivarathar dharisanam way changed


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->