இன்று... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு தேவைகள் பூர்த்தியாகும்? - Seithipunal
Seithipunal


மேஷம்:

வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். அரசு வேலைகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் நீங்கும். குடும்ப உறுப்பினர்களின் எதிர்பாராத வருகையால் கலகலப்பான சூழல் அமையும். தனவரவுகள் மேம்படும். கல்வி கற்கும் மாணவர்களுக்கு மேன்மை உண்டாகும். தாய்வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும். 

ரிஷபம்:

செய்தொழிலில் உங்களின் செல்வாக்கு உயரும். சுப நிகழ்ச்சிகள் சம்பந்தமான முயற்சிகள் யாவும் கைகூடும். பணிபுரியும் இடங்களில் பொறுப்புகளும், பணியில் மாற்றமும் உண்டாகும்.  மறைமுக எதிர்ப்புகளால் சாதகமான சூழல் ஏற்படும். சகோதரர்களால் அனுகூலமான பலன்கள்  உண்டாகும். திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும். காது தொடர்பான பிரச்சனைகள் குறையும்.

மிதுனம்:

உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு கிடைக்கும். சாதுர்யமாக பேசி எண்ணிய காரியத்தை முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளிடம் நிதானப்போக்கை கையாளவும். முக்கிய முடிவுகளை பெரியோர்களிடம் கலந்து ஆலோசித்து எடுக்கவும். உடல்நலத்தில் கவனம் வேண்டும். 

கடகம்:

சொந்த பந்தங்களிடம் கோபப் பேச்சுக்களை தவிர்க்கவும். வியாபாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். எதிர்பார்த்த வேலைகள் முடிவதில் காலதாமதம் ஏற்படும். வழக்கு விவகாரங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். மற்றவர்களின் செயல்களில் தலையிட வேண்டாம்.

சிம்மம்:

சக பணியாளர்களிடம் வீண் விவாதங்களை தவிர்க்கவும். நண்பர்களின் மூலம் ஆதரவான சூழல் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த கடன் வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

கன்னி:

மற்றவர்களின் பணிகளை  கூடுதலாக பார்க்க வேண்டி வரும். தொழிலில் புதிய பொறுப்புகள் உண்டாகும். தலைமைப் பதவியில் இருப்பவர்களுக்கு சாதகமான நாள். திறமைகளின் மூலம் இலாபம் அதிகரிக்கும். பெருந்தன்மையான செயல்பாடுகளால் உங்களின் மீதான மதிப்பு உயரும். பிள்ளைகளின் செயல்பாடுகளால் மகிழ்ச்சி உண்டாகும். 

துலாம்:

அரசு தொடர்பான காரியங்களில் சாதகமான உதவிகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். தொழில் முனைவோருக்கு சாதகமான நாள். குடும்ப உறுப்பினர்களால் சுபச்செய்திகள் வந்து சேரும். எண்ணிய பணியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். புதுவிதமான எண்ணங்கள் உதயமாகும்.

விருச்சகம்:

புதிய முயற்சிகளில் எண்ணிய இலாபம் கிடைக்கும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மாணவர்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவருக்கு திறமைகள் வெளிப்படும். கால்நடைகளிடம் சற்று விழிப்புணர்வுடன் செயல்படவும்.

தனுசு:

வாடிக்கையாளர்களிடம் அமைதியாக நடந்து கொள்ளவும். வர்த்தகம் சம்பந்தமான முடிவுகளில் கவனம் வேண்டும். செய்யும் பணியில் காரிய தடைகள் ஏற்படும். மனைவியின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்ப்பதன் மூலம் நன்மை உண்டாகும்.

மகரம்:

பணியில் சக ஊழியர்களால் ஆதாயம் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். பணியில் முக்கிய பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து சுபச்செய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஆதரவு பெருகும்.

கும்பம்:

பணியில் நிம்மதியான சூழல் உண்டாகும். போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். கடன்களை அடைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். எண்ணிய செயலை பல தடைகளை கடந்து முடிப்பீர்கள். எதிர்பாராத சில செயல்களால் ஒரு புதிய அனுபவம் கிடைக்கும். உடைமைகளில் கவனம் வேண்டும்.

மீனம்:

வியாபாரத்தில் புதிய நுணுக்கங்களை கற்பீர்கள். பிள்ளைகளின் மூலம் அனுகூலமான சூழல் உண்டாகும். முடிவுகளை எடுக்கும் முன் தகுந்த ஆலோசனைகளை கேட்கவும்.  சகோதரர்களிடம்  வீண் விவாதங்களை தவிர்க்கவும். உயர் அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும். வாகன வசதிகள் பெருகும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

apr 03 rasiplan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->