ரேஷன் அரிசி மட்டும் ஏன் இவ்வுளவு தரமற்றதாக இருக்கிறது.. காரணம் என்ன?..! - Seithipunal
Seithipunal


நாம் ரேஷன் கடைகளில் வாங்கும் அரிசிகள் குறித்து சில நேரம் விமர்சனம், சில நேரம் பாராட்டுகளையும் தெரிவித்து இருப்போம். ஏன் ரேஷன் கடைகளுக்கு அரிசி இவ்வாறாக வருகிறது? அதற்கென தனி அரிசி ரகம் உள்ளதா? என்பது குறித்த பல சந்தேகம் நமக்குள் இருக்கும். 

அந்த சந்தேகத்திற்கு பதிலளிக்கும் வகையில் முகநூல் பதிவொன்று வைரலாகி வருகிறது. அந்த பதிவில், " வீடுகளில் பயன்படுத்தப்படும் புழுங்கல் அரிசி நெல்லை சுத்தம் செய்கையில், ஒருநாள் ஊறவைத்து பின் அவித்து காய வைப்பார்கள். ரேஷன் கடைகளுக்கு வரும் நெல்லை ஐந்து நாட்கள் முதல் ஒருவாரம் வரை தொட்டியில் ஊறவைத்து, பின்னர் அவித்து காயவைத்து எடுப்பார்கள்.

வீட்டில் இதனை ஊறவைத்து அவிக்கும் சமயங்களில் நல்லதொரு மனம் வரும். ரேஷன் கடைகளுக்காக தயார் செய்யப்படும் நெல்லில் துர்நாற்றம் மட்டுமே எஞ்சியிருக்கும். களங்களில் நெல் காய்ந்துகொண்டு இருக்கும் போது, அப்பகுதி முழுவதுமாகவே துர்நாற்றம் வீசும். அங்கு வசிப்பவர்களுக்கு இது பழக்கமானது என்றாலும், புதிதாக செல்லும் நபர்களுக்கு வித்தியாசமாக இருக்கும்.

ரேஷன் அரிசிக்கென்று தனியொரு நெல் ரகம் இல்லை. தஞ்சாவூரில் இருந்து ரேஷன் கடைகளுக்கான கொள்முதல் 90 விழுக்காடு நடைபெறுகிறது. குறுவை நெல் அறுவடை காலங்களில் தஞ்சாவூர் பகுதியில் மழை பெய்துகொண்டு இருக்கும் சூழலில், நெல்லை அறுத்து நெற்பயிரை அடித்து வரும் நெல்லை சாக்கில் சேகரிப்பார்கள்.

நெல்லின் ஈரப்பதம் பொதுவாக 10 விழுக்காடு முதல் 15 விழுக்காடு வரை இருக்கலாம் என்ற பட்சத்தில், பல நிர்வாக அதிகார காரணங்களால் ஈர நெல்லை கொள்முதல் செய்து, நெல்லின் ஈரப்பத்திற்கு ஏற்றாற்போல விலையை குறைத்துக்கொள்ளும் நிலை இருக்கிறது. ஈரப்பதத்தை அளப்பதற்கு கருவிகள் வைத்திருந்து, பல சோதனைகளுக்கு பின்னர் நெல்லை அதிகாரிகள் கொள்முதல் செய்வார்கள். விவசாயிகள் அரும்பாடுபட்டு விளைவித்த பொருட்களை வேண்டும் என்றே மழைக்காலங்களில் சேகரிக்காமல் அலட்சியம் செய்வார்கள்.

இதன்பின்னர் நெல் அரிசி ஆலைகளுக்கு செல்கையில், ஆலைகளுடன் ஒப்பந்தம் போட்டுள்ள அரசிடம் 68 விழுக்காடு சதவீதம் ஈரப்பசை கழிவுகள் போக அரிசியை உற்பத்தி செய்து வழங்க வேண்டும். புழுங்கல் அரிசியை தயார் செய்கையில் 70 விழுக்காடு அரிசி கிடைக்கும் என்ற பட்சத்தில், ஆலையாளர்கள் 6 விழுக்காடு அரிசியை கைப்பற்ற இரண்டு முறை நெல்லை வேக வைத்து லாபம் பார்ப்பார்கள். ஈரப்பசை கணக்கிலும் குளறுபடிகள் செய்து மேலும் லாபங்கள் பெறுவார்கள்.

இப்படியாக தயாராகிய அரிசி ஊறவைத்த அரிசியை போல இருக்கும். இதனை மூடையில் நிரப்பி குடிமையியல் விநியோக மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இதில், பல மூடை அரிசிகள் சில நேரங்களில் ஈரம் காயமேலேயே அலட்சியமாக அனுப்பி வைக்கப்படும். இந்த சேமிப்பு கிட்டங்கி நிலையத்தில் 6 மாத தேவைக்கான ரேஷன் அரிசி ஏற்கனவே தேவைக்காக வைத்திருக்கும் நிலையில், ஒன்றன் மீது ஒன்றாக புதிய அரிசியும் அடுக்கி வைக்கப்படும். அரிசியை வாங்கும் போது கடுக் கடுக் என்ற சப்தம் சிறிதளவு சாப்பிட்டு பார்க்கும் போது வந்தால் தான் அது நன்றாக காய்ந்த அரிசிக்கான அடையாளம்.

ரேஷன் கடைகளுக்காக வரும் அரிசி பெரும்பாலும் இல்லங்களில் இட்லிக்கு உபயோகம் செய்யப்படும். சில நேரங்களில் காற்றோட்டம் இல்லாத சேமிப்பு நிலையங்களில் வரம்பை விட பல மாதங்கள் ஈரப்பதத்துடன் வைக்கப்படும் அல்லது அனுப்பி வைக்கப்படும் அரிசியின் தரம் காரணமாக அரிசி மூடைகள் புழு வந்து, கெட்ட வாடையுடன் ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். இதுவே தற்போது நடைமுறையில் உள்ளது. கடந்த காலங்களில் அரிசி வாங்க கூட இல்லாத அளவு இருந்தாலும், இப்போது பரவாயில்லை " என்று கூறப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Why Ration shop rice is so less Quality? Causes of Less Quality Ration Rice


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->