வாட்ஸ் அப்பில் இனி இதற்கெல்லாம் கட்டணம்.? வெளியான அதிர்ச்சி தகவல்.! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் பொதுமக்கள் தங்களின் தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கு பல்வேறு வகையான செயலிகள் பயன்பாட்டில் உள்ளது.

இதில் குறிப்பாக மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியை சிறியவர் முதல் பெரியவர் வரை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி அனைத்து தகவல்களையும் பரிமாறிக் கொள்ள முடியும்.

அதனால் இது பொது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து தனிநபர் மட்டுமல்லாமல் குழுவாக இணைந்தும் செய்திகளை பரிமாறிக்கொள்ளும் வசதிகளும் உள்ளது.

இந்த நிலையில், தற்போது இதில் இலவசமாக வீடியோ கால், வாய்ஸ் கால் மேற்கொள்வதற்கு பதிலாக தனி கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்று இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கோரிக்கை வைத்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகளிலும் அழைப்புகளை இனிமேல் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையானது கடந்து 2008 ஆம் ஆண்டு முதல் முன்வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மீண்டும் 2016-17 ஆம் ஆண்டு மீண்டும் கோரிக்கை வைக்கப்பட்டது.

மேலும், தற்போது நீண்ட காலத்திற்கு பிறகு இந்த கோரிக்கைக்கு அதிகமான விளக்கங்கள் தர வேண்டும் என்று வைக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை டாட் நிறுவனம் ஏற்க்கும் போது வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், கூகுள் டியோ, சிக்னல் மற்றும் டெலிகிராம் உள்ளிட்ட செயலிகளில் இலவசமாக வழங்கப்படும் அழைப்புகள் இனிமேல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதனால் வாடிக்கையாளர்கள் அதிகப்படியான தொகையை செலுத்த முற்படுவார்கள். மேலும் இந்த தகவலால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சிக்குயுள்ளாகினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

WhatsApp audio and video call charges in future


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->