நேசமணியின் உடல் நிலையை கண்டு கவலையில் ஹர்பஜன் சிங்.! இணையத்தில் வைரலாகும் #pray_for_Neasamani.!! - Seithipunal
Seithipunal


இன்றுள்ள காலகட்டத்தில் நாம் செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் கூட., இணையத்தில் பதிவு செய்யும் பட்சத்தில் எதிர்பாராத விதமாக ட்ரெண்டிங் ஆவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. அந்த வகையில்., பல வெற்றிகளும் இணையத்தின் மூலமாக ட்ரெண்டிங் ஆகும் விஷயங்கள் அடைந்துள்ளது. 

என்று இணையதள பயன்பாடு நம்மிடையே வந்ததோ அன்றிலிருந்து பல நல்ல விஷயங்களுக்கும்., சில கெட்ட விஷயங்களுக்கும் இந்த இணையத்தை நாம் பயன்படுத்தி வருகிறோம். நமது கருத்துக்களை ஆதரிப்போர் மற்றும் ஆதரிக்காதவர்கள் என்று இருபுறம் இருந்து வரும் பேச்சுக்களை கடந்து., பல கலவரங்களை ஏற்படுத்தும் பேச்சுக்களில் இருந்து நாம் இணையத்தை உபயோகம் செய்து வருகிறோம். 

கடந்த 2001 ம் வருடத்தில் நடிகர் விஜய்., சூர்யா., ரமேஷ் கண்ணா., தேவயானி., நகைச்சுவை மன்னன் வடிவேலு ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் பிரண்ட்ஸ். இந்த திரைப்படம் வந்து ஏறக்குறைய சுமார் 20 வருடங்கள் ஆகவுள்ள நிலையில்., தற்போது இந்த படத்தில் வடிவேலு நடித்த நேசமணி கதாபாத்திரம் குறித்த ஹேஷ்டேக்குகள் வைரலாகி வருகிறது. 


#pray_for_Neasamani என்ற பெயரில் வைரலாகி வரும் ஹேஷ்டேக்குகளில்., காண்டிராக்டர் நேசமணியை அவரது பணியாளர் சுத்தியால் தாக்கியதால்., அவர் சென்னையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்., அவருக்கு வெளிநாட்டில் இருந்து வந்துள்ள மருத்துவர் சிகிச்சை அளித்ததாகவும்., அவர் தற்போது நலமாக உள்ளார் என்ற புகைப்படங்கள் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. 


இந்த புகைப்படங்களை தனி நபர் முதல் சினிமா பிரபலங்கள் வரை., கிரிக்கெட் நட்சத்திரங்கள் என்று பெரும்பாலானோர் பகிர்ந்து வருகின்றனர். அதில் நேசமணி நலம் பெற இறைவனை வேண்டுகிறோம் என்ற வகையில் வைரலாகி வருகிறது. அது குறித்த பதிவுகளை கீழே காண்போம். 










என்னதான் நாம் தேவையற்ற விஷயங்களை இணையத்தில் வைரல் செய்து அதற்கான நீதியை அல்லது பிரச்னையை வெளியுலகத்திற்கு தெரியப்படுத்தினாலும்., தமிழகத்தில் தீர்க்கப்படவேண்டிய பல பிரச்னைகள் உள்ளதற்கு தற்போது வரை ஒரு பதிவுகள் கூட பதிவு செய்யவில்லை என்பதுதான் நிதர்சனம்.... 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

twitter trending on #prayfornesamani


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->