ஊரே பீதியில் இருக்க, அஜித் ஆம்பளையாம், விஜய் நல்ல ஆக்டராம்... முட்டுச்சந்தில் முட்டிக்கொள்ளும் கலவரம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளது. இதனால் மே மாதம் 31 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவ சிகிச்சைக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில்) ஒரேநாளில் 33,381 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்த கொரோனா பாதிப்பு 19,78,621 ஆக உயர்ந்துள்ளது. 

474 பேர் பலியான நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 22,289 ஆக உயர்ந்துள்ளது. 30,063 பேர் பூரண நலன் பெற்றதை தொடர்ந்து, மொத்த பூரண நலன் பெற்றோரின் எண்ணிக்கை 16,43,284 ஆக உயர்ந்துள்ளது. தலைநகர் சென்னையை பொறுத்த வரையில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக 2,779 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,93,881 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் மொத்தமாக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3.13 இலட்சமாக உயர்ந்துள்ளது. 

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக 4,734 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. விருதுநகரில் 1,016 பேருக்கும், திருச்சியில் 1,617 பேருக்கும், திருப்பூரில் 2,074 பேருக்கும், மதுரையில் 1,395 பேருக்கும், ஈரோட்டில் 1,699 பேருக்கும், செங்கல்பட்டில் 1,392 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. சென்னையில் பாதிப்பு குறைய தொடங்கினாலும், பல மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்து இருப்பது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகமே கொரோனாவை எண்ணி பயத்தில் இருக்க, சமூக வலைத்தளங்களில் அவரவர் நடிகர்களுக்கு ஆதரவளித்து முட்டாள்தனமான ஹாஷ்டேக் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர். நாட்டு நடப்பு அறிந்து இவர்கள் இப்படி செய்கிறார்களா? அல்லது அவர்களின் உலகம் திரைநடிகர்களின் 3 மணிநேர திரைப்படத்திற்குள் மட்டும் இருக்கிறதா? என சந்தேகம் தான் பலருக்கும் எழுகிறது. 

ஒருபுறம் கொரோனா பிரச்சனை மக்களை வதக்கியெடுக்க, எதிர்காலத்தில் நீருக்காக கர்நாடகாவிடம் கையேந்தும் வகையில் செய்ய கர்நாடக அரசு மேகதாதுவில் அணைகள் கட்ட முயற்சிக்கிறது. சமூக வலைத்தளத்தில் வைரலாகும் டேக்கால் பல விஷயங்கள் வெளிவந்து, தீர்வுகளும் கிடைத்துள்ள நிலையில், வெட்டித்தனமாக அஜித் விஜய் ரசிகர்கள் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர். நடிகர் விஜய் நடிகர் தான் என ஒரு கோஷ்டியும், அஜித் ஆம்பளைதான் என மற்றொரு கோஷ்டியும் ட்ரெண்டிங் செய்து வருகிறது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Twitter Actor Fans Trend About Vijay Actor Ajith Male Crazy Handlers 28 May 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->