ஏலியன் உருவத்திற்காக, இவ்வளவு செலவு செய்தாரா? 24 லட்சம் செலவு செய்த இன்ஸ்டாகிராம் பிரபலம்! - Seithipunal
Seithipunal


மனிதர்களாக பிறந்த அனைவருமே நாம் அழகாக இருக்க வேண்டும் என்று  எண்ணுவோம் அதுதான் இயற்கையாக எல்லோருக்கும் தோன்றும் எண்ணமும் கூட. ஆனாலும் ஒரு சில மனிதர்கள்  வித்தியாசமான தோற்றங்களை விரும்பி அதனையடைய தங்களது பொருள் மற்றும் நேரத்தையும் செலவு செய்து  தாங்கள் நினைத்ததை சாதித்தும் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு நபரை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

அந்தோணி லோஃப்ரெடோ என்ற நபர் தன்னை ஒரு கருப்பு ஏலியனாக காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக தன் உடலின் பல்வேறு பகுதிகளையும் பல்வேறு அறுவை சிகிச்சைகளை செய்து தன் இமைகளில் நிறத்தையும் மாற்றி ஏலியன் போலவே மாற பலவிதமான முயற்சிகளை செய்திருக்கிறார். அதற்காக இவ்வாறு தனது கண் உதடு மற்றும் காது போன்ற பாகங்களில் அறுவை சிகிச்சை செய்து சில பகுதிகளையும் அகற்றி இருக்கிறார்.

இவர் இந்த மாதிரியான முயற்சிகளை செய்தும் அவர் நினைத்த உருவத்தை அடைவதில் 50 சதவீதம் மட்டுமே வெற்றி கண்டிருக்கிறார். மேலும் அவரது இந்த விகாரமான தோற்றத்தை கண்டு  மக்கள் அவரை வெறுத்து விலகி போவதாகவும் தெரிவித்துள்ளார். ஆனாலும் அவரது தாய் இந்த முயற்சிக்கு தன்னுடைய முழு ஆதரவையும் தெரிவித்து மகனை அரவணைத்து வருகிறார்.

யார் தன்னை வெறுத்து ஒதுக்கினாலும்  தன்னுடைய இலக்கிலிருந்து மாறப்போவதில்லை என தெரிவித்திருக்கும் அந்தோணி லோஃப்ரெடோ தன்னுடைய இலக்கை அடைந்து தீர்வேன் என்பதில் உறுதியாக இருக்கிறார். கருப்பு எலியனாக மாறும் முயற்சிகளுக்கு இதுவரை இவர் 30000 அமெரிக்க டாலர்களை செலவழித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது இந்திய மதிப்பில்  24 லட்ச ரூபாய் ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The Instagram celebrity who became an alien spent 24 lakhs for this image


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->