இ-பாஸ் ரத்து செஞ்சிட்டாலும்., அப்டியே.. உதயநிதியின் கேள்விக்கு சரமாரி பதில்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வரும் 2021 ஆம் வருடத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்காக தமிழக கட்சிகள் அனைத்தும் களப்பணிகளை துவங்கியுள்ளது. மேலும், கூட்டணி தொடர்பான பேச்சுவார்தைகளும் மறைமுகமாக நடைபெற்று வருகிறது. 

கொரோனா காரணமாக அரசியல் வட்டாரத்தில் நடைபெறும் பரபரப்பிற்கு பஞ்சம் ஏற்பட்டு இருந்தாலும், சில நடவடிக்கைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தின் முன்னணி கட்சிகள் அனைத்தும் கூட்டணிக்கான பணிகள், களப்பணிகள், நிர்வாகிகள் தேர்வு மற்றும் பிற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

இந்த நிலையில், திராவிட முன்னேற்ற கழகம் பி.கே என்ற பெரும்புள்ளியுடன் சேர்ந்து தி.மு.கவை மக்களிடம் அடையாளப்படுத்தும் பல பணிகளை செய்து வருகிறது. இது இணையத்தின் மூலமாகவும் நடைபெற்று வருகிறது. 

பல இணையதள விளம்பரங்கள் மூலமாக தி.மு.க. ஓட்டிய விளம்பரங்கள் எல்லாம் எப்படி இருந்தது என்பதை சென்ற தேர்தலிலேயே பார்த்திருக்கலாம். அரண்டவனிற்கு இருண்டதெல்லாம் பேய் என்பதை போலவும், நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்பதை போலவும் இருந்தது. 

இந்த நிலையில், தி.மு.கவின் தேர்தல் பணிகளை அதிமுக அரசு திட்டமிட்டே தடுத்து வருகிறது என்றும், இதனாலேயே இ-பாஸ் முறையை தமிழக அரசு இரத்து செய்யவில்லை என்றும் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார். 

தி.மு.கவின் தேர்தல் பணிகள் என்னவென்றால் சிறுபிள்ளைக்கு புத்திமதி சொல்ல வேண்டிய இடத்தில், படித்திருக்கும் உதயநிதி ஸ்டாலின் " தாத்தா தொலைக்காட்சி கொடுத்தார், அப்பா ரிமோட் மற்றும் செட்டப் பாக்ஸ் கொடுப்பார் " என்று கூறுவதுதான். இவ்வாறான அறிவுபூர்வமான பதிலை கூற தேர்தல் பணிவேறா? என்ற கேள்விதான் எழுகிறது. 

இலவசம் என்பது நமது மக்களுக்கு பழகிப்போய், இலவசத்திற்காக எதிர்பார்க்கும் நிலை இருந்தாலும், சிறுகுழந்தையின் வளர்ச்சிக்கு பதில் கூட சொல்லாத நிலையில் தான் திமுக தேர்தல் பரப்புரை இருக்கிறது. அதே குழந்தையிடம் நீ இப்போது நன்றாக படிக்க வேண்டும். 

முதலில் படிப்பு, அப்புறம் தொலைக்காட்சி என்று கூறினால் என்ன பிரச்சனை?, அதனை ஏன் தவிர்த்தார்? என்ற கேள்விக்கு பதில் இன்று வரை கிடைக்கவில்லை என்பதே நிதர்சனம். இதில், திமுகவின் தேர்தல் வளர்ச்சியை ஆளுங்கட்சி கெடுக்கிறதாம்.. " கேட்பவன் கேனை என்றால், கிணற்றுக்குள் திமிங்கலம் தான் " என்று நெட்டிசன்கள் விமர்சனம் செய்கின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Social Media Handlers told about Udhayanidhi Statement


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->