VPN பயன்படுத்தினால், ஆபாசப்படம் பார்ப்பதை கண்டறிய முடியாதா.?!  - Seithipunal
Seithipunal


குழந்தைகள் போர்னோகிராபி என்று சொல்லப்படும், குழந்தைகளை வைத்து ஆபாச படங்கள் எடுக்கப்படுவது அல்லது குழந்தைகள் குறித்த நீலப்படங்கள் உலகம் முழுவதுமே தடைசெய்யப்பட்ட மற்றும் சட்ட விரோதமான ஒரு செயல் தான். ஆனால், அடல்ட் மூவிஸ்ஸை அதிகப்படியான லாபம் குவிக்கும் ஒரு பகுதி குழந்தைகள் பார்ன் வீடியோஸ் தான் என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா?

இந்த குழந்தைகள் ஆபாச தளங்களை கண்டுபிடித்து முடக்கினாலும், எண்ணிக்கையில் அடங்காத மற்றும் மிகவும் ரகசியமான குழந்தைகள் குறித்த ஆபாச வீடியோக்கள் நிறைந்த இணையதளங்கள் இன்னமும் அதுபோன்ற படங்களை காட்சிப் படுத்திக் கொண்டுதான் இருக்கின்றது. மேலும், இந்த குழந்தைகள் குறித்த வீடியோக்களை காசு கொடுத்து பார்க்கும் வக்கிரவாதிகளின் எண்ணிக்கை மலைக்க வைக்கும் அளவிற்கு மோசமாக இருக்கின்றது.

இவ்வாறு, குழந்தைகள் குறித்த பார்ன் வீடியோக்களை பார்க்கும் வக்கிரவாதிகள் உலகிலேயே இந்தியாவில்தான் அதிகம் என்றும், இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகம் என்றும், தமிழகத்திலேயே சென்னையில்தான் அதிகம் என்றும் புள்ளிவிவரம் கூறுவது தமிழர்களுக்கு மிகவும் பெருமைக்குரிய விஷயம் அல்லவா? இப்படி வக்கிரவாதிகளின் எண்ணிக்கையில் முதல் இடத்தைப் பிடித்திருக்கும் நாம்தான் தமிழ் கலாச்சார பெருமைகளை இங்கே பதிவு செய்து கொண்டு இருக்கின்றோம்.

18 வயதுக்கு மேற்பட்ட அடல்ஸ் தானே பார்ன் வீடியோவில் நடிப்பார்கள்? குழந்தைகள் எப்படி அதில் நடிப்பார்கள்..? என்று பலருக்கும் கேள்வி எழலாம். இந்த குழந்தைகள் குறித்த பார்ன் வீடியோக்கள் அனைத்தும் குழந்தைகளை மட்டுமே வைத்து எடுக்கப் படுவது அல்ல. கார்ட்டூன் அடிப்படையில் எடுக்கப்படும் வீடியோக்களும் இருக்கின்றது.

இதைப்பார்த்து பாலுணர்வு தூண்டல் அடையும் வக்கிரபுத்தி கொண்டவர்கள் தான், சிறுவர், சிறுமிகள் மீது பாலியல் சீண்டல்கள் மற்றும் வன்புணர்வு செய்கின்றனர். இவர்களை கைது செய்ய தான் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. 

உங்கள் மொபைலில் நீங்கள் என்ன வகையான ஆபாச படத்தை பார்க்கிறீர்கள் என்பதை அரசாங்கம் எப்படி கண்டுபிடிக்கும் என்ற சந்தேகம் சிலருக்கு இருக்கலாம். உங்களுடைய மொபைல் ஐபி அட்ரஸ்லிருந்து என்ன நீங்கள் தேடி இருக்கிறீர்கள் மற்றும் டவுன்லோட் செய்து இருக்கின்றீர்கள் என்பதை ஐபி அட்ரஸ் வைத்து கண்டுபிடித்துவிடலாம்.

VPN பயன்படுத்தினால் நாம் தேடுவதை கண்டுபிடிக்க முடியுமா என்று சிலர் பதிவு செய்கின்றனர். அது ஒன்றும் அவ்வளவு கடினமான விஷயமல்ல சட்டபூர்வமான நடவடிக்கை என்று அரசாங்கம் விவரம் கேட்டால் STATIC VPN தகவல்களை கொடுத்து தான் ஆக வேண்டும். யார் எந்த நாட்டு ஐபி அட்ரஸ் உபயோகித்து இருக்கிறார்கள் என்பதை ANALYTICS வைத்து எளிதாக கண்டுபிடித்து விடலாம்.

ஆனால் NON STATIC VPN என்றால் கொஞ்சம் கடினம் தான் இருப்பினும், இதனை FBI நினைத்தால், எளிதாக கண்டுபிடித்துவிடலாம். அப்படி என்றால் நம்முடைய மொபைல் போனில் இருக்கும் பிரைவேட் போட்டோஸ் மற்றும் வீடியோக்கள் இது போல மற்றவர்கள் பார்வைக்கு செல்லுமா என்றால் உங்களுடைய மொபைல் போன் DEVICEல் மட்டும் நீங்கள் வைத்திருக்கும் வரை அதனை எடுக்க முடியாது.

இப்படி முக்கிய விவரங்களை வெளியில் தெரியாமல் "ஆபாசப்படம் பார்ப்பவர்கள் கைது" என்ற விஷயத்தை வைத்து கேலிக்கூத்தாக மீம்ஸ் கிரியேட் செய்து கல்லா கட்டிக் கொண்டு இருப்பவர்கள் யோசிக்க வேண்டிய விஷயம் ஒன்றே ஒன்றுதான், 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் குறித்த ஆபாச படங்களை தேடுவதற்காக முயற்சிக்கிறது எல்லாம் ஒருவரின் மனதில் இருக்கும் மோசமான வக்கிரத்தை தான் எடுத்துக் கூறுகிறது.

அவர்களுக்கு 'குழந்தைகளுடன் பாலுறவு வைத்துக் கொள்ள வேண்டும்' என்று விரும்பும் எண்ணம் அல்லது அதனை பார்த்து ரசிப்பது மற்றும் அதனால் பாலுணர்வுகள் தூண்டப்படுவது என்று இது எதுவும் சாதாரணமான நடவடிக்கைகளில் வராது. இது ஒரு விதமான மனநோய். 6மாத குழந்தை கூட கற்பழிக்கப்படுகின்றது என்றால் அதற்கு முக்கிய காரணம் இது போன்ற மனநோய் கொண்ட வக்கிரங்கள் தான். 

மேலும் கற்பழிப்பு சம்பவங்கள் ஏற்படுத்துபவர்களின் வயது குறைந்துகொண்டே போகின்றது என்றால் அல்லது ஒருவர் மிகச்சிறிய வயதிலேயே வன்புணர்வு வழக்கில் கைது செய்யப்படுகின்றன என்றால் இந்த மனநோய் தான் அதற்கு காரணம். இந்த குற்றத்தை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால், அதனை கேலிக்கூத்தாக்கி மீம்ஸ் போட்டு இந்த பிரச்சினையை நீர்த்துப் போகச் செய்வது கூட ஒருவகையான மனநோய் தான்.

தங்களுடைய வீட்டு குழந்தையை அப்படி ஒரு நிலையில் வைத்து யோசித்துப் பாருங்கள். இதனை கிண்டல் செய்ய எவருக்கும் தோன்றாது. எந்த விஷயத்தை ஆராய்ந்து பார்க்க வேண்டும், எந்த விஷயத்தை கிண்டல் செய்ய வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாத பலரும் தங்களுடைய மீம் பேஜ்க்கு பாலோவர்களை பிடிக்க தமிழ் கலாச்சாரம் குறித்து பேசுவது தான் வேடிக்கையாக இருக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IS POSSIBLE TO FIND PORN WATCHING WHILE USING VPN


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->