சாதி மாறி கலப்பு திருமணம்.! காதல் கணவனை 7 நாட்களில்., துடிதுடிக்கவிட்ட காதலி.!  - Seithipunal
Seithipunal


சேலம் அழகாபுரத்தை அடுத்த வாழப்பாடியார் வட்டம் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவருக்கு சுரேஷ்குமார், என்ற மகன் இருந்துள்ளார். இவர் பக்கத்து வீட்டைச் சேர்ந்த சோபியா என்ற பெண்ணை காதலித்துள்ளார்.

இருவரும் அடிக்கடி நேரில் சந்தித்து பேசியும், போனில் பேசியும் காதலித்து வந்துள்ளனர். அவர்களின் பெற்றோருக்கு இந்த காதல் விவகாரம் தெரியவே, வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால், தங்கள் காதலை தியாகம் செய்ய இருவரும் தயாராக இல்லை.

இந்த நிலையில், கடந்த 12ம் தேதி வீட்டை விட்டு இருவரும் வெளியேறி பழனியில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டு இருக்கின்றனர். பின்னர் பல்வேறு இடங்களுக்கும் உல்லாச பயணம் மேற்கொண்டவர்கள், சேலத்திற்கு சென்று சூரமங்கலம் சின்னப்ப நகர் பகுதியில் தனியாக வீடு ஒன்றை எடுத்து தனிக்குடித்தனம் நடத்தி வந்துள்ளனர்.

ஆனால், இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவருக்குள்ளும் பிரச்சனை எழுந்துள்ளது. மேலும், சோபியாவுக்கு சுரேஷ்குமாரின் குடும்பத்தினருடன் ஒத்துப்போகவில்லை. இந்நிலையில், திருமணமான 7நாட்களில் சுரேஷ் உடன் வாழ முடியாது என முடிவு செய்த சோபியா கணவரை பிரிந்து விட முடிவு செய்துள்ளார்.

arrest, seithipunal

எட்டு வருடம் காதலித்த கணவர் என்றும் பாராமல், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சாதிப் பெயரைச் சொல்லித் திட்டியதாக அவர் மீதும், அவரது தந்தை, தாய் ஆகியோர் மீதும் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் எஸ்சி எஸ்டி சட்டப்பிரிவின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சுரேஷ் குமாரை கைது செய்தனர்.

மேலும், அவரது பெற்றோர் தலைமறைவாக இருப்பதால் அவர்களையும் தேடிவருகின்றனர். திருமணமாகி எட்டு வருடம் காதலித்து கஷ்டப்பட்டு கரம்பிடித்து திருமணமான 7நாளில் காதல் கணவனை துடிக்க துடிக்க சிறைக்கு அனுப்பிய காதலியால் உறவினர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டு இருக்கின்றது.

மேலும், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவி வருகின்றது. பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்யும் ஆணானாலும், பெண்ணானாலும் சேர்ந்து வாழ்வது கடினம்தான் என்பதை இதுபோன்ற பல்வேறு சம்பவங்கள் நமக்கு அவ்வப்போது உணர்த்திக் கொண்டுதான் இருக்கின்றது. இதுபோன்ற ஒத்துவராத சூழலினால் தான் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்பதும் பலருக்கு புரிவதில்லை. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

salem inter caste marriage problem in azhagapuram lovers


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->