ஆம்! ஆர்எஸ்எஸ் பேரணிக்கு போட்டி பேரணியாகத்தான் நான் அறிவித்தேன்! தமிழ்நாட்டில் அவர்களின் வால் ஒட்ட நறுக்கப்படும்! - திருமாவளவன்! - Seithipunal
Seithipunal


காந்தி கொன்ற ஆர்எஸ்எஸ் காரர்களுக்கும் காந்தி ஜெயந்திக்கும் என்ன சம்பந்தம்!

திராவிட தேசம் என்ற அமைப்பின் சார்பில் சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு சிறப்பு அழைப்பாளராக வீசிக தலைவர் திருமாவளவன் அழைக்கப்பட்டார். அப்புறம் நடைபெற்ற செய்தியாக சந்திப்பில் சரியான கேள்விகளுக்கு திருமாவளவன் பதில் அளித்தார். 

அந்த சந்திப்பில் செய்தியாளர் ஒருவர் "ஆர்எஸ்எஸ் பேரணிக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் பேரணி அறிவித்துள்ளதாக பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்" என கேள்வி எழுப்பினார்.

செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்த திருமாவளவன் " அவர்கள் அப்படி சொன்னால் அதை நான் மறுக்க விரும்பவில்லை. அதை ஏற்கிறேன். ஆர்எஸ்எஸ் இங்கே அணிவகுப்பு நடத்துவதற்கு எந்த தேவையும் எழவில்லை. 

அதிலும் அவர்கள் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாடும் நோக்கம் என சொல்கிறார்கள். ஆகஸ்ட் 15 அல்லது ஆகஸ்ட் மாதத்தில் நடத்திருக்க வேண்டும். அவர்கள் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று தேர்வு செய்கிறார்கள். இதில் உள்நோக்கம் இருக்கிறது. காந்தியடிகளை படுகொலை செய்தது ஆர்எஸ்எஸ் காரர்கள் என்று ஊர் அறிந்த உலகறிந்த உண்மை. அவர்கள் ஏன் அக்டோபர் 2 தேர்வு செய்துள்ளனர் என்று தெரிய வேண்டும். 

மற்றொரு காரணம் அம்பேத்கரின் நூற்றாண்டு விழா கொண்டாடுவதாக சொல்கிறார்கள். அம்பேத்கரின் நூற்றாண்டு விழா முடிந்து 27 ஆண்டுகள் ஆகின்றன. இப்பொழுது நூற்றாண்டு விழாவே இல்லை. எனவே அம்பேத்கரின் நூற்றாண்டு விழா கொண்டாடுகிறோம் என சொல்வது அம்பேத்கரை இவர்கள் தவறாக பயன்படுத்துகிறார்கள் என தெரிகிறது.

 மேலும் அம்பேத்கருக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம்?. அம்பேத்கர் இவர்களை எதிர்த்து அரசியல் செய்தவர் இந்து மதத்தை விட்டு வெளியேறியவர். இந்துத்துவம் வீழாமல் இந்த மண்ணில் சகோதரத்துவம் சமத்துவம் மலராது என என முழங்கியவர் அம்பேத்கர். அவர்களின் கொள்கைக்கு எதிரானவரின் பிறந்த நாளை கொண்டாடுவது என்பது அப்பட்டமான ஏமாற்று வேலை. 

மேலும் ஒரு காரணமாக விஜயதசமியை கொண்டாடுகிறோம் என்று சொல்கிறார்கள். ஆனால் விஜயதசமி அக்டோபர் 5ம் தேதி வரும்போது ஏன் அக்டோபர் 2ம் தேதி ஊர்வலம் நடத்த வேண்டும். எனவே அணி வகுப்பு நடத்த இவர்கள் கூறும் அனைத்து காரணங்களும் பொருந்தா காரணங்கள். 

நாங்கள் அக்டோபர் 2ம் தேதி மனித சங்கிலி நடத்துவது சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி. அதை அவர்கள் ஏட்டிக்கு போட்டியாக கருதினால் அதை நான் மறுக்க தயாராக இல்லை என செய்தியாளர் கேள்விக்கு பதில் அளித்தார். 

மேலும் செய்தியாளர் ஒருவர் ஆர்எஸ்எஸ் இயக்கத்தையும் மதச்சார்பற்ற இயக்கத்தையும் தமிழக அரசு ஒரே தட்டில் வைத்து பார்ப்பது பற்றி உங்கள் கருத்து என்ன என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த திருமாவளவன் "ஒரே தட்டில் வைத்து பார்க்கிறார்கள் என்பதைவிட சட்ட ஒழுங்கை நிலை நாட்ட இரண்டு இயக்கங்களையும் ஒரே மாதிரியாக அணுகுகிறார்கள். ஆர் எஸ் எஸ் வன்முறை தூண்டி மக்களிடையே மோதலை உண்டாக்கி உள்ளனர். அதற்கான சான்றுகள் நிறைய உள்ளன. இந்தியா முழுவதும் அவர்கள் வன்முறையை கண்ட கையாண்டு உள்ளனர். 

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மதவாத இயக்கம் என்று சொன்னால், பயங்கரவாத இயக்கங்களோடு தொடர்புடைய இயக்கம் என்று சொன்னால், அதனால் அது தடை செய்யப்படுகிறது என்று சொன்னால், அந்த இயக்கத்தோடு இணைந்து தடை செய்ய வேண்டிய இயக்கம் ஆர்எஸ்எஸ். 

அவர்கள் துப்பாக்கிகளோடு சுற்றும் கும்பல். எங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் ரவிகுமாருக்கு கொலை மிரட்டல் விடுத்த அமைப்பு சனாதன சன்ஸ்தா அமைப்பு. ஆகவே இது போன்ற பயங்கரவாத அமைப்புகளை தடை செய்யாமல், மக்களுக்கு தொண்டாற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போன்ற அமைப்புகளை பயங்கரவாத இயக்கங்கள் தொடர்பு படுத்தி தடை செய்திருப்பதில் ஒரு அரசியல் உள்நோக்கம் உள்ளது என்றே கருதுகிறேன். 

தமிழகத்தில் பாஜகவிற்கு பண்ணிந்த அரசு இல்லை. இங்கு நடப்பது பெரியார் அரசு, அண்ணா அரசு, கலைஞர் அரசு என்பதை அவர்கள் இன்னும் உணராமல் உள்ளனர். பிற மாநிலங்களில் செய்த சேட்டையை இங்கே செய்யலாம் என எண்ணுகிறார்கள். தமிழ்நாட்டில் அவர்களின் வால் ஒட்ட நறுக்கப்படும் என்பதை காலம் பதில் சொல்லும்" என திருமாவளவன் பதில் அளித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Yes i declared it as a rival rally to the RSS rally Their tails will be chopped off in Tamil Nadu


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->