திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு என்ன ஆனது...? கிரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி...!
What happened to DMK General Secretary Duraimurugan Admitted Greams Road Apollo Hospital
தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் உடல்நலப் பரிசோதனைக்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துரைமுருகனுக்கு இதயம் தொடர்பான உடல்நலப் பிரச்சினை இருப்பதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தற்போது தெரிவிக்கப்படுகிறது.

துரைமுருகன், தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்து வருகிறார். அக்கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த க.அன்பழகன் மறைவுக்குப் பின்னர், துரைமுருகன் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.கடந்த ஆட்சிக் காலத்தில் நீர்வளத்துறை அமைச்சராகவும் அவர் பொறுப்பு வகித்தார்.
தமிழக அரசியலில் நீண்டகாலமாக சட்டமன்ற உறுப்பினராக இருந்து வரும் மூத்த அரசியல்வாதிகளில் துரைமுருகனும் ஒருவர். முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையிலும் அவர் இடம்பெற்று பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
English Summary
What happened to DMK General Secretary Duraimurugan Admitted Greams Road Apollo Hospital