மந்திரம் செய்து என்னால் பணம்  வர வைக்க முடியாது! மேற்கு வங்க முதல்வர் மம்தா சர்ச்சை பேச்சு! - Seithipunal
Seithipunal


மேற்கு வங்க மாநிலத்தின் முதலமைச்சராக இருப்பவர்  மம்தா பானர்ஜி. ஆளும் மத்திய அரசின்  கொள்கைகளையும் திட்டங்களையும் எதிர்த்து துணிச்சலாக கேள்வி கேட்கக்கூடிய மாநில  முதலமைச்சர்களின் இவரும் ஒருவர்.  மேற்குவங்க மாநிலத்தின் பங்குரா மாவட்டத்தில் அரசு அதிகாரிகளுக்கான சேவைகளை தொடங்கி வைக்கும் கூட்டத்தில் கலந்து கொண்ட முதலமைச்சர் மம்தா பானர்ஜி மத்திய அரசு தனது மாநிலத்திற்கு ஒதுக்க வேண்டிய  நிதியை தாமதம் செய்து  வருவதை கண்டித்து பேசியுள்ளார்.

இது தொடர்பாக பேசியுள்ள அவர்  தன்னால் மந்திரங்கள் செய்து அதன் மூலம் பணத்தை வர வைக்க முடியாது எனக் கூறினார். மத்திய அரசு மாநிலங்களுக்கு தரவேண்டிய  ஊரக வளர்ச்சிப் பணிகளுக்கான நிதியை அளித்தால்தான்  நம்மால் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த முடியும் எனக் கூறிய அவர். இது ஒன்றும் சினிமா இல்லை  பணம் வானத்தில் இருந்து கொட்டுவதற்கு என்று கூறினார்.

 மேற்கு வங்கத்தின் பட்ஜெட்  பிப்ரவரி 15ஆம் தேதி அங்குள்ள சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது அதில் அரசு ஊழியர்களுக்கான ஊதியத்தில் மூன்று சதவீத அகவிலைப்படியை உயர்த்தி  அறிக்கையை சமர்ப்பித்திருந்தார் நிதி அமைச்சர் பட்டாச்சார்யா. இதனை சுட்டிக்காட்டி பேசி உள்ள மம்தா மாநில அரசு தனது மக்களுக்கும் ஊழியர்களுக்கும்  தேவையான எல்லா நலத்திட்ட உதவிகளையும் முன்னெடுத்து வருகிறது.

ஆனால் மத்திய அரசு ஊரக வளர்ச்சி திட்ட பணிகளுக்கு வழங்க வேண்டிய நிதியை  வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாக குற்றம் சாட்டினார். இது பற்றி தொடர்ந்து பேசிய அவர்  அரசாங்க ஊழியர்கள் மத்திய அரசிடம் எந்த கோரிக்கையை வைத்தும் பலன் ஒன்றும் இல்லை. அவர்கள் நம் மாநில திட்டங்களுக்கான வருகிறது என தெரிவித்தார்  நிதியை ஒதுக்க மறுக்கிறார்கள்  மேலும் மத்திய அரசு தொடர்ந்து மேற்கு வங்கத்தை புறக்கணித்து  வருகிறது என தெரிவித்தார்.

மேலும் தனது தலைமையிலான  மேற்கு வங்கத்தில் ஆளும் அரசனை மத்திய அரசு தனிமைப்படுத்துவதாக தெரிவித்த அவர் மாநில அரசு  அதன் மக்களை என்றும் கைவிடாது எனக் கூறினார். தனது மாநிலத்தில் வாழும் மக்களுக்கு நில உரிமை போன்ற பல உரிமைகளை வழங்கியுள்ளதை சுட்டிக்காட்டி அவர் என் மாநிலத்தில் இருந்து ஏழை மக்களை ஒருபோதும் வெளியேற்ற மாட்டேன் எனக் கூறினார்.

மத்தியில் ஆளும் அரசு ஏதோ தங்களது பணத்தை எடுத்து மாநிலங்களுக்கு கொடுப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறது எனக் கூறிய மம்தா நாம் செலுத்தும் வரிப்பணத்தில் இருந்து நமக்கான பங்கை  தர மறுப்பது ஏன் என கேள்வி எழுப்பினார். நம் மாநில மக்களுக்கு அவர்களுடைய உரிமைகள் கிடைக்கப்பெற வேண்டும்  அப்படி நம் மாநிலங்களுக்கு எல்லா உரிமைகளும் கிடைக்கப் பெற்றால் மட்டுமே நம் மாநிலம் இன்னும் முன்னேற்ற பாதையில் செல்ல உதவும் என கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

westbengal cm mamta banarjee slams central goverment for denial of state rights


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->