முதலமைச்சர் பழனிசாமியுடன், விஷால் திடீர் சந்திப்பு! - Seithipunal
Seithipunal


பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் பிறந்த நாளையொட்டி அவரை கவுரவப்படுத்தும் விதமாக இளையராஜா 75 என்ற இசை நிகழ்ச்சியை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பிப்ரவரி 2, 3 தேதியில் நடைபெற்றது.

மேலும் இந்த இசைநிகழ்ச்சி மூலம் தயாரிப்பாளர் சங்கத்துக்கு ரூ.10 கோடி நிதி திரட்டவும் அதை நலிந்த தயாரிப்பாளர்களுக்கு வீடு கட்ட நிலம் வாங்குவது உள்ளிட்ட நலத்திட்ட பணிகளுக்கு பயன்படுத்தவும் திட்டமிட்டு உள்ளனர்.

இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமியுடன், தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் சந்தித்தார்.

இளையராஜா 75 நிகழ்ச்சியை நடத்த உறுதுணையாக இருந்ததாக கூறி முதலமைச்சர் பழனிசாமியை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் திரையுலகினர்கள் வந்துள்ளோம். வரி விவகாரத்தில் மற்ற மொழிப்படங்களை விட தமிழ்ப் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை வைத்தோம் 

இளையராஜா 75 நிகழ்ச்சியை நடத்த உறுதுணையாக இருந்ததற்காக முதலமைச்சர் பழனிசாமியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தோம் என்று விஷால் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vishal meet tn cm


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->