அக்.9ல் சி.வி சண்முகம் ஆஜராக வேண்டும்.! விழுப்புரம் நீதிமன்றம் அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் பகுதியில் கடந்த மார்ச் மாதம் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி சண்முகம் பேசிய போது போது தமிழக அரசை 420 அரசு என்றும், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை 420 முதலமைச்சர் என்றும் அவதூறாக பேசியதாக அரசு வழக்கறிஞர்கள் சார்பில் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பூர்ணிமா முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பூர்ணிமா அக்டோபர் 9 ஆம் தேதி மீண்டும் விசாரணை நடைபெறும் என்றும், அன்றைய தினம் சி.வி சண்முகம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Villupuram court orders CVShanmugam to appear on Oct9


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->