தேமுதிக நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு விஜயகாந்த் வைத்த கோரிக்கை.! - Seithipunal
Seithipunal


சட்டப்பேரவைத் தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய தேமுதிக நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர், வேட்பாளர்கள் உள்ளிட்டோருக்கு பாராட்டு என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக - அமமுக கூட்டணி சார்பில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் களம் கண்டனர்.  இவர்களின் வெற்றிக்காக தேமுதிகவினர், கூட்டணி கட்சியினர் உள்ளிட்டோர் இரவு - பகல் பாராமல் தீவிர களப் பணியாற்றினர்.  மிகச்சிறந்த முறையில் பணியாற்றிய கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர், வேட்பாளர்கள்  உள்ளிட்டோருக்கு தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் சார்பில் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்‍. 

ஆட்சி பலம், பண பலம், அதிகார பலம் என அனைத்தையும் தைரியத்துடன் எதிர்கொண்டு, தேர்தல் களத்தில் சிறப்பாக பணியாற்றி களம்கண்ட சிங்கங்களாக ஜனநாயகத்தில் மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என்பதற்காக எதையும் எதிர்பாராமல் தமிழகத்தின் எதிர்கால நலன் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு சிறப்பாக பணியாற்றி, அரும்பாடுபட்ட அனைவருக்கும் எனது பாராட்டுக்கள் . வாக்கு எண்ணும் மையங்களில் எந்த தவறும் நடைபெறாமல் இருக்க கழக தொண்டர்கள் இரவு - பகல் பாராமல் விழிப்புடன் கண்காணிக்க வேண்டும் 

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2–ஆம் தேதியும் எந்த விதமான அதிகார துஷ்பிரயோகமும்  நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மே 2 –ஆம் தேதி நல்ல தீர்ப்பு வரும் என நம்புவோம் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijayakanth statement on apr 09


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->