தவறை உணர்ந்த விஜய்! மீண்டும் அறிவிக்கப்படும் கட்சியின் பெயர்?  - Seithipunal
Seithipunal


அரசியலுக்கு வருவதற்கான முன்னோட்டமாக நடிகர் விஜய் மாணவர்களை சந்திப்பது, புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நலத்திட்டங்களை வழங்குவது என பல்வேறு நகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். 

இந்நிலையில் , தமிழக வெற்றிகழகம்  என்ற கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதியன்று நடிகர் விஜய் கட்சியை தொடங்கினார்.  கட்சி தொடங்கியதை ரசிகர்கள் வரவேற்றாலும், தமிழக வெற்றி கழகம் என்ற அவரது கட்சியின் பெயர் தமிழ் அறிஞர்களிடையே விமர்சனத்திற்குள்ளானது. அதாவது வெற்றிக்கு பிறகு 'க்'  வரவேண்டும் என்று கூறுகின்றனர். 

அதோடு  கட்சியின் பெயரை ஆங்கிலத்தில் சுருக்கி உச்சரித்தால் டிவிகே என்று வருகிறது. இதே போல் வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சியின் பெயர் ஏற்கனவே உள்ளது. இதற்கு அவரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் என திருத்தி மீண்டும் கட்சி பெயரை அறிவிக்க விஜய் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. தவறை யார் சுட்டிக்காட்டினாலும் நாங்கள் திருத்திக்கொள்வோம்  என்று விமர்சனங்களுக்கு விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay realized the mistake! Name of party to be re-announced?


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->