உதயநிதி கச்சத்தீவில் இருந்து ஒரு பிடி மண்ணை எடுத்து வர முடியுமா.? சரமாரியாக கேள்வி எழுப்பிய விஜயபிரபாகரன்.!! - Seithipunal
Seithipunal


மணப்பாறை சட்டமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் கிருஷ்ணகோபாலை ஆதரித்து விஜயபிரபாகரன் வையம்பட்டி மற்றும் துவரங்குறிச்சி பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது, முதல் முதலில் நான் அரசியல் தொடங்கிய இடம் இந்த மணப்பாறை தான். முதல் சட்டமன்றத் தேர்தலில் நான் பிரச்சாரம் செய்கிறேன். 

எய்ம்ஸ் மருத்துவமனை செங்கலை எடுத்து அதிமுகவிடம் அருமையான கேள்வியை உதயநிதி ஸ்டாலின் கேட்கிறார். நல்ல கேள்விதான். ஆனால் உதயநிதி ஸ்டாலின் கச்சத்தீவில் இருந்து ஒரு பிடி மண்ணை எடுத்து வர முடியுமா.? அவர்கள் மீது குறையை வைத்துக் கொண்டு, அடுத்தவர்களை பற்றி கேள்வி கேட்கிறார்கள். 

இப்போது அமமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம். ஏனென்றால் அமமுகவின் அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் உள்ளனர். இந்த தேர்தலில் நம் கூட்டணி மகத்தான வெற்றி பெறும். மேலும் முஸ்லிம்களும், எங்களுக்கும் எப்போதும் ஒற்றுமை உண்டு. சிறுபான்மை மக்களுக்கு விஜயகாந்த் எப்போதும் நல்லதே செய்து கொண்டிருப்பார். அதனால் தான் என்னுடைய தம்பி பெயர் முதலில் சவுகத் அலி வைக்கப்பட்டது. ஆனால் பாஸ்போர்ட் உள்ளிட்ட தேவைகளுக்கு சண்முகபாண்டியன் என மாற்றினோம் என கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijay prabhakaran says about udhayanidhi stalin


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->