மில்லியன் இதயங்களின் வெற்றி இது...! - இந்திய அணிக்கு விஜய் உருக்கமான வாழ்த்து! - Seithipunal
Seithipunal


T20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் பரபரப்பான இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளது.

கடைசி வரை பதற்றம் நிறைந்த இந்த ஆட்டத்தில் இந்திய வீரர்கள் காட்டிய தைரியம் மற்றும் திறமை ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.இந்த வெற்றியை நாடு முழுவதும் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.

பல இடங்களில் பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி, ஆட்டம்-பாட்டத்துடன் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். சமூக வலைதளங்களிலும் இந்திய அணிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜயும் இந்திய அணியின் சாதனையை பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பதிவில், “மீண்டும் சாம்பியன்கள்! டி20 உலகக்கோப்பையை மீண்டும் வென்ற இந்திய அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

மைதானத்தில் வீரர்கள் காட்டிய மன உறுதி முதல், வெளியே இருந்து அவர்களை உற்சாகப்படுத்திய கோடிக்கணக்கான இந்தியர்களின் இதயத் துடிப்புவரை – இந்த வெற்றி ஒவ்வொரு இந்தியருக்கும் உரியது. எதிர்கால போட்டிகளிலும் இந்திய அணி மேலும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

victory millions hearts Vijay warmest congratulations Indian team


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->