பிரதமர் மோடி மீதே நடவடிக்கை எடுத்த வெங்கையா நாயுடு.! - Seithipunal
Seithipunal


இந்திய அரசியலில் மிக மிக அரிதாக நடக்கக்கூடிய நிகழ்வு ஒன்று நேற்றைய மாநிலங்களவை நிகழ்வில் நடந்துள்ளது.

வியாழக்கிழமை(பிப் 6) நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி பேசி கொண்டிருந்தார்.  அப்போது தேசிய என்.பி.ஆர்(குடிமக்கள் பதிவேடு) தொடர்பாக பிரதமர் மோடி பேசிய வார்த்தை ஒன்று மாநிலங்களவை அவை குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.  

தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக பிரதமர் மோடி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளை மிகக்கடுமையாக விமர்சித்து பேசினார், அப்போது அவர் பேசிய வார்த்தை ஒன்றை மாநிலங்களவை  அவை குறிப்பிலிருந்து நீக்க மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு நடவடிக்கை எடுத்துள்ளார். அதேபோலவே, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் பேசிய சில வார்த்தை ஒன்றையும் அவை குறிப்பில் இருந்து நீக்கி மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு நடவடிக்கை எடுத்துள்ளார். 

கடந்த வியாழக்கிழமை மாலை 6.20 முதல் 6.30 வரை பிரதமர் மோடி ஆற்றிய உரையில் ஒரு பகுதியிலிருந்து அந்த வார்த்தை நீக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் 2018 ஆம் ஆண்டு பிரதமர் மோடி மாநிலங்களவையில் ஆற்றிய உரையிலிருந்து சில பகுதிகள்  நீக்கப்பட்டதுகுறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

venkaiah naidu take action on pm modi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->