கலைஞர் பாதை பத்திரிகை ஆசிரியரை புரட்டி புரட்டி அடித்த விசிக மாவட்ட செயலாளர்.! - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டையில் கலைஞர் பாதை பத்திரிகை ஆசிரியர் குணசேகரன் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த குண்டர்களால் முத்துக்கடை பகுதியில் நடுரோட்டில் வைத்து நாயை அடிப்பது போன்று அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணி மாநாட்டில் பேசிய திருமாவளவன் அசிங்கமாக சிலைகள் இருந்தால் அது இந்து கோவில்கள் என்று இந்து மத நம்பிக்கையை கேவலப்படுத்தும் வகையில் பேசியது இந்துமத நம்பிக்கை உடையவர்களிடம் பெரும் அதிர்ச்சியையும்,கோபத்தையும் ஏற்படுத்தியது.

தொடர்ந்து இந்துமதத்தையும் ஆன்மீக நம்பிக்கைகளையும் அவதூறு மற்றும் ஏளனம் செய்து பேசி வரும்  திருமாவளவன் அவர்களின் பேச்சினை கண்டிக்கும் வகையில் இந்து மதத்தினர் சமூகவலைதளம் உள்ளிட்ட  பல்வேறு வகையில் மூலம் தங்களது எதிர்ப்பு பதிவுகளை பதிவு செய்து வருகின்றனர், 

இந்நிலையில் இராணிப்பேட்டையை சேர்ந்த கலைஞர் பாதை பத்திரிகை நிறுவனர் மற்றும் அந்த பத்திரிகையின் ஆசிரியருமான குணசேகரன் என்பவர் அவரது முகநூல் பக்கத்தில் திருமாவளவனை பற்றி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

இந்த பதிவினால் கோபம் அடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் குண்டா(எ)சார்லஸ், காரை.தமிழ்,மற்றும் சில விசிக நிர்வாகிகள் சிலர் இராணிப்பேட்டையில் கலைஞர் பாதை பத்திரிகை ஆசிரியர் குணசேகரன் அவர்கள் முத்துகடை பகுதியில் சென்று கொண்டு இருக்கும் போது விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த மாவட்ட செயலாளர் குண்டா(எ)சார்லஸ் தலைமையில் வழிமறித்து நடுரோட்டில் வைத்து நாயை அடிப்பது போன்று அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதேபோல கடந்த மாதம் அருவாள் வைத்து பிறந்தநாள் கேக்கை வெட்டியதை தட்டிக்கேட்க முயன்ற காவல்துறையினரை அருவாளால் வெட்ட முயன்ற வழக்கில் இதே பகுதியை சேர்ந்த விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட தொண்டரணி நிர்வாகி கைது செய்யப்பட்டு தற்போது குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துப்பதிவை கருத்துப்பதிவால் எதிர்நோக்காமல் பத்திரிகை ஆசிரியரை நடுரோட்டில் வைத்து நாயை அடிப்பது போன்று அடித்து சுதந்திரமாக சுற்றித்திரியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்களால் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vck party member attack journalist


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->