செல்பி எடுக்க வந்தவரை திருப்பியனுப்பிய வைகோ! பணம் இல்லாததே காரணம்..! - Seithipunal
Seithipunal


ஆம்பூரில் செல்பி எடுக்க பணம் தராதவரை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ திருப்பி அனுப்பியுள்ளார். இச்சாபவம் சலசலப்பு ஏற்படுத்தியதுள்ளது.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு கட்சியினர் யாரும் சால்வை அணிவிக்கக் கூடாது என்றும் அப்படி சால்வை அணிவிக்க விரும்புவோர் சால்வைக்கு பதிலாக கட்சிக்கு நிதி வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். 

பின்னர் வைகோவுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்புவோர் குறைந்தபட்ச நிதியாக ரூ.100 வழங்க வேண்டும் என கடந்த 9-ம் தேதி ம.தி.மு.க. சார்பில் தெரிவித்திருந்தார் .


 இந்நிலையில், கிருஷ்ணகிரியில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்னையில் இருந்து வைகோ கார் மூலம் வேலூர் வழியாக சென்றார்.

வைகோவின் கார் ஆம்பூர் பஸ் நிலையம் அருகே வந்த போது பட்டாசு வெடித்து கட்சியினர் வரவேற்றனர். பின்னர், காரை விட்டு வைகோ கீழே இறங்கியதும் கட்சியினர் ஒவ்வொருவரும் அவரிடம் ரூ.100 வழங்கி செல்பி எடுத்துக்கொண்டனர்.

அப்போது, பஸ் நிலையம் அருகே நின்றிருந்தவர் ஓடி வந்து வைகோவுடன் செல்பி எடுக்க சென்றார். அவரை கட்சிக்காரர் என எண்ணி அவரிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால், அவர் பணம் இல்லை என்று கூறியதும், வைகோ அவரை திருப்பியனுப்பினார். இதனால் ஏமாற்றமடைந்த அவர் விரக்தியுடன் திரும்பி சென்றார்.

இச்சம்பவத்தை செல்போனில் யாரோ பதிவு செய்து வாட்ஸ்-ஆப் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு பரவி வருகிறது. 
இதை தொடர்ந்து  கட்சி நிதியாக ஒரே நாளில் ரூ.53 ஆயிரம் வசூல் ஆனதாக ம.தி.மு.க.வினர் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vaiko only take selfie for money


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->