எம்.பி பதவியை காப்பாற்றி கொள்ள அடுத்தகட்ட நடவடிக்கையை எடுத்த வைகோ., பதவி தப்புமா!! - Seithipunal
Seithipunal


கடந்த 2009 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற நான் குற்றஞ்சாட்டுகிறேன் என்ற நூல் வெளியீட்டு விழாவில், விடுதலை புலிகளுக்கு ஆதரவாகவும்,அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசிற்கு எதிராகவும் வைகோ பேசியதாகவும், அவரின் பேச்சு இந்திய இறையாண்மைக்கு எதிராக இருப்பதாக கூறி வைகோ மீது அப்போது ஆட்சியிலிருந்த திமுக தேசதுரோக வழக்கு பதிவு செய்தது சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

பத்து ஆண்டுகளாக நடந்து வரும் வழக்கில், வைகோவுக்கு ஓராண்டு சிறையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்திருந்த கடந்த 5 ஆம் தேதி சிறப்பு நீதிமன்றம் தேர்ப்பளித்திருந்தது.

இந்தநிலையில், தேச துரோக வழக்கில் தனக்கு வழங்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வைகோ மேல்முறையீடு செய்துள்ளார், தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முழுமையாக நிரூபிக்கப்படாத நிலையில் தண்டனை வழங்கியது தவறு என அவர் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவில் கூறப்பட்டள்ளது.

மேல்முறையீடு மனு உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வருகிறது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vaiko appeal his case in high court


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->