மேலும் ஒரு அமைச்சர்., அதிரும் பாஜக., ஆட்டம் காண வைக்கும் எதிர்க்கட்சிகள்.! மொத்தம் இத்தனை பேரா?! - Seithipunal
Seithipunal


வரும் பிப்ரவரி 10-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை 7 கட்டங்களாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. 

இந்த தேர்தலை முன்னிட்டு அம்மாநில அரசியல் காட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், கட்சித்தாவல் சம்பவங்களும் தொடங்கிவிட்டன.

இதில், பாஜக.,வுக்கு சிக்கலை உண்டாக்கும் வகையில் அக்கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் சுவாமி பிரசாத் மவுரியா, தாரா சிங் சவுகான் ஆகிய இருவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். 

அவர்களை தொடர்ந்து 5 பாஜக எம்.எல்.ஏக்களும் விலகுவதாக அறிவித்து உள்ளனர். இது அம்மாநில அரசியலில் திடீர் திருப்பமாக அமைந்துள்ளது.

இந்நிலையில், பாஜகவுக்கு மேலும் ஒரு அதிர்ச்சியாக பாஜக தரம் சிங் சைனி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆயுஷ், உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகம் ஆகிய துறைகளின் (தனிப் பொறுப்பு) அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிப்ரவரி 10-ம் தேதி தேர்தல் நடக்க உள்ள நிலையில் ஆளும் பாஜகவில் இருந்து அடுத்தடுத்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ., க்கள் பதவி விலகுவது அக்கட்சியினரை ஆட்டம் காண வைத்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

UTTARPRADESH BJP MINISTERS AND MLAS


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->