தமிழ்நாட்டில் "வீடு எடுத்து தங்கினாலும் பாஜக வெல்லாது".. மோடியை போட்டு தாக்கிய உதயநிதி.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் மக்களவை பொதுத் தேர்தல் இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

பிரதமர் நரேந்திர மோடி பாஜக வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரிக்க கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் ஏழு முறை தமிழகத்திற்கு வருகை புரிந்துள்ளார். மேலும் வரும் ஏப்ரல் 15 ஆம் தேதி மீண்டும் அவர் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இந்த நிலையில் தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் "பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் வீடியோ எடுத்து தங்கினாலும் பாஜக வெற்றி பெறாது. தமிழ்நாட்டின் மீது பிரதமர் நரேந்திர மோடிக்கு எந்த அக்கறையும் இல்லை. 

தேர்தலுக்கு தேர்தல் பேன்சி டிரஸ் ஷோ போல வந்து செல்கிறார். பாஜக கொண்டு வரும் சட்டத்தை எதிர்த்தால் விசாரணை அமைப்புகளை வைத்து மிரட்டுகின்றனர். பாஜகவின் உருட்டல் மிரட்டல்கள் எல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம்"என விமர்சனம் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Udhayanithi criticized BJP Narendra Modi


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->