"இதற்கு காரணம் அவங்க தான்" - ஜெ-வை புகழ்ந்து தள்ளிய உதயநிதி.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் தேர்தல் வந்தாலே திமுக தரப்பு நீட் தேர்வு விவகாரத்தை கையில் எடுத்து விடும். அந்த வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொது தேர்தல், அதன்பிறகு நடைபெற்ற 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற பொது தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என அனைத்து தேர்தலிலும் திமுக இளைஞரணி செயலாளரும் தற்போதைய விளையாட்டு துறை அமைச்சரமான உதயநிதி ஸ்டாலின் நீட் விவகாரம் தொடர்பாக பிரச்சாரத்தை கையில் எடுப்பார். 

அதே பாணியில் தற்போது நடைபெற உள்ள மக்களவைப் பொதுத் தேர்தலில் நீட் விவகாரத்தை கையில் எடுத்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் உதயநிதி ஸ்டாலின். அந்த வகையில் திமுக கூட்டணியில் மதுரையில் களமிறங்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் வெங்கடேசன் ஆதரித்து மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் பகுதியில் பிரச்சாரம் செய்த உதயநிதி ஸ்டாலின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை புகழ்ந்து பேசி உள்ளார். 

மக்கள் மத்தியில் பேசிய உதயநிதி ஸ்டாலின் "இந்தியா முழுவதும் நீட் தேர்வு கொண்டு வந்தார்கள். ஆனால் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை நீட் தேர்வு தமிழகத்திற்குள் அனுமதிக்கவில்லை. ஆனால் அவர் மறைந்த பிறகு பாஜக அழுத்தத்தால் நீட் தேர்வுக்கு அதிமுக அனுமதி அளித்தது" என ஜெயலலிதாவை புகழ்ந்து பேசி உள்ளார். ஆனால் மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் திமுக கூட்டணி தான் நீட் தேர்வை கொண்டு வந்தது எனவும் உச்சநீதிமன்றத்தில் நீட் தேர்வுக்காக வாதாடியது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிதம்பரத்தின் மனைவி சிதம்பரம் தான் என அதிமுகவினர் பதிலடி கொடுத்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Udayanidhi praised Jayalalithaa on NEET issue


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->