துரோகிகளின் கட்சியில் இருந்து பிரிந்துவிட்டோம்., இணைவதற்கு வாய்ப்பே இல்லை.!! இரட்டை இலையை மீட்டே தீருவோம் - டிடிவி தினகரன் அதிரடி.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் முன்னாள் முதலைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் 75 நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பின்னர் சிகிச்சை பலனின்றி 2016 ம் வருடம் டிசம்பர் 5 ம் தேதியன்று காலமானார். 

இவரது மறைவுக்கு பின்னர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் கட்சி பதவியில் வந்த பிரச்சனைகளில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகமானது தற்போது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தின் தலைமையிலும்., அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் டிடிவி.தினகரன் மற்றும் சசிகலா தலைமையிலும் பிரிந்தது. 

இந்நிலையில்., அமமுகவின் கழக துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அந்த பேட்டியில்., தீய சக்திகள் நிறைந்த திராவிட முன்னேற்ற கழகத்தை விட்டு எம்.ஜி.ஆர் வெளியே வந்து கட்சியை துவங்கியது போல்., துரோக சக்திகளால் நிறைந்த அ.தி,மு.கவில் இருந்து வெளியேறி புதிய இயக்கத்தை துவங்கி வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறோம். 

அதிமுகவை விட்டு பிரிந்து வந்த நாங்கள் மீண்டும் அவர்களுடன் இணைவதற்கு வாய்ப்பே இல்லை., முதல்வராக பணியாற்றிய புரட்சி தலைவரும்., புரட்சி தலைவியும் அனைத்து மக்களுக்கும் தேவையான திட்டங்களை அறிமுகம் செய்து., செயல்படுத்தினர்.  

தமிழகத்தில் தற்போது நடைபெறும் ஸ்டெர்லைட் மற்றும் 8 வழி சாலை திட்டங்களை மக்கள் எதிர்க்கும் நிலையில்., எம்.ஜி.ஆர்ரும் - ஜெயலலிதாவும் இது போன்ற திட்டங்களை ஆதரவு செய்தது இல்லை., தற்போது ஆட்சியில் உள்ள மத்திய அரசானது வெளிநாட்டு முதலீடுகளை வளர்பதாக கூறி தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடிக்க நினைக்கின்றனர். 

இரட்டை இலையை மீட்டெடுப்பதே எங்களது நோக்கம் என்று டிடிவி.தினகரன் தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ttv dinagaran speech about admk


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->