வலிமையோடு தமிழகத்தை கொண்டு செல்வதற்கான நம்பிக்கை - டிடிவி தினகரன் புத்தாண்டு வாழ்த்து.! - Seithipunal
Seithipunal


வலிமையோடு தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்வதற்கான நம்பிக்கையை இப்புத்தாண்டு விதைக்கட்டும் என்று, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், "எல்லைகளைக் கடந்து உலகெங்கும் கொண்டாடப்படுகிற ஆங்கிலப் புத்தாண்டில் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மனிதநேயம் தழைத்திட, எல்லாரும் எல்லாமும் பெற்றிட இல்லாமை இல்லாத நிலை உருவாகிட 2022 புத்தாண்டில் வழி பிறக்கட்டும்.

அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனாவின் புதுவடிவமான ஓமிக்ரான் பயம் நீங்கி, ஆரோக்கியத்துடனும் மனநிம்மதியுடனும் ஒவ்வொருவரும் வாழ்ந்திட புத்தாண்டில் இறையருளை வேண்டுகிறேன்.

தமிழகத்தின் உரிமைகளையும், தமிழ்நாட்டின் நலன்களையும் காத்து நிற்பதற்கான வலிமையைப் புத்தாண்டு தந்திடட்டும். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் காலத்து மாண்புகளோடும், வலிமையோடும் தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்வதற்கான நம்பிக்கையை இப்புத்தாண்டு விதைக்கட்டும். 

தொழில்களும், விவசாயமும் செழித்தோங்கி உழைக்கிற மக்கள் அனைவருக்கும் 2022 புத்தாண்டில் நன்மைகள் நிறைந்திட வாழ்த்துகிறேன்." என்று டிடிவி தினகரன் தனது வாழ்த்தினை தெரித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTV Dhinakaran Wish New Year 2022


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->