அண்ணன் எடப்பாடி பழனிசாமி இப்படி செய்திருக்க வேண்டாம்! எனக்கு வருத்தமா இருக்கு - டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கைபடி, சசிகலாவிடம் விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில், சென்னை தியாகராய நகரில் இல்லத்தில் சசிகலாவுடன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் தெரிவிக்கையில், "ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானது தான். ஜெயலலிதா இறந்த தேதியில் எந்த குழப்பமும் இல்லை. அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் குற்றச்சாட்டுகள் எதிர்கொள்ளப்படும்.

மக்கள் வரிப்பணத்தை வீணாக்க, அரசியல் காரணங்களுக்காக உருவாக்கப்பட்டது ஆணையம். எய்ம்ஸ் மருத்துவர்களின் கருத்தையே ஆணையம் நிராகரித்துள்ளது. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோதுதான் நான் பார்த்தேன்" என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.

அப்போது செய்தியாளர்கள், நாளை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளார். இதுபற்றி உங்களின் கருத்து என்று கேள்வி எழுப்ப, அதற்க்கு டிடிவி தினகரன், " அண்ணன் எடப்பாடி பழனிசாமிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

சபாநாயகர் ஆளும் கட்சிக்குத்தான் சார்பாக இருப்பார். இது தெரிந்த கதைதான். அதற்க்கு போய் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்பது, ஒரு அரசியல் வாதியாக எனக்கு வருத்தமாக உள்ளது. சட்டமன்றத்திற்கு சென்று மக்கள் நலனுக்காக குரல் கொடுக்க வேண்டும்" என்று டிடிவி தினகரன் பதிலளித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTV Dhinakaran Say About EPS Protest oct


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->