அமமுக - மருது சேனை சங்கம் கூட்டணி உடன்பாடு.. ஒப்பந்தம் கையெழுத்து.!
TTV Dhinakaran Marudhu Senai Sangam Alliance TN Election 2021
2021 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றப் பொதுத்தேர்தல் கூட்டணி ஒப்பந்தம் டிடிவி தினகரனால் வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து அம்மா மக்கள் கட்சியின் பொதுசெயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், " 06.04.2021 அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத்தேர்தலில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும், மருது சேனை சங்கமும் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திப்பது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கும் மருது சேனை சங்கத்திற்கும் இடையே இன்று ஏற்பட்ட ஒப்பந்தப்படி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில், மருது சேனை சங்கத்திற்கு தமிழ்நாட்டில் கீழ்காணும் ஒரு (1) சட்டமன்றத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதன்படி, திருமங்கலம் தொகுதி மருது சேனை சங்கத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த கூட்டணி ஒப்பந்தத்தில் மருது சேனை சங்கத்தின் தலைவர் கரு. ஆதி நாராயண தேவர் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் கைய்யெழுத்தியுள்ளனர் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
TTV Dhinakaran Marudhu Senai Sangam Alliance TN Election 2021